உலக பொருளாதார வரிசையில் 6ம் இடத்திற்கு சரிந்த இந்தியா..!

Indian economy
Indian economySOURCE:LINKEDIN
சேலம் சுபா

சேலம் சுபா எனும் பெயரில் பல வருடங்களாக முன்னணி பத்திரிக்கைகள் நாளிதழ்களில் கட்டுரைகள் , கதைகள், நேர்காணல்கள் எழுதி வருகிறேன்.15 வயதில் துவங்கிய எழுத்து பயணத்தில் தற்போது பாரம்பரியம் மிக்க கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக உங்களிடம் எனது படைப்புகள் இணைவதில் பெரு மகிழ்ச்சி. வாழ்வியல், தன்னம்பிக்கை, ஆன்மீகக் கட்டுரைகளில் ஆர்வம். "உறவுச்சங்கிலி" எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. எழுத்து என்பது வரம். அது படிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையவேண்டும் என்பதை கருத்தில் வைத்து எழுதுகிறேன். நிச்சயம் நீங்களும் விரும்புவீர்கள். ஆதரவு அளிக்கும் கல்கிக்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

Updated on

2026 ஆம் ஆண்டின் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சமீபத்திய தரவுகளின்படி, இந்தியா 4-வது இடத்திலிருந்து 6-வது இடத்திற்கு சரிந்துள்ளது. உலகப் பொருளாதார வரிசையில் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் ஐக்கிய ராஜ்யம் (UK) ஆகியவைகள் இந்தியாவுக்கு முன்னால் உள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் சமீபத்திய உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தின்படி (WEO), இந்தியா உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரமாக இரண்டு இடங்கள் சரிந்துள்ளாலும் வேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளாதாரம் என்ற தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா 2025-ல் ஜப்பானை முந்தி 4-வது பெரிய பொருளாதாரமாக மாறும் என்ற எதிர்பார்ப்பு தாமதமாகியுள்ளது.

இந்தியா முன்னர் நான்காவது பெரிய பொருளாதார நாடாகத் தரவரிசைப்படுத்தப்பட்டிருந்தது, ஆனால் தற்போது பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் இங்கிலாந்து மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளாலும் முந்தப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஏப்ரல் 2026 உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட மதிப்பீட்டின்படி, இந்தியாவின் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.15 டிரில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா, ஐக்கிய இராச்சியம் (4.26 டிரில்லியன் அமெரிக்க டாலர்) மற்றும் ஜப்பான் (4.38 டிரில்லியன் அமெரிக்க டாலர்) ஆகிய நாடுகளுக்குப் பின்னர் பின்தங்கியுள்ளது.

32.38 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் அமெரிக்கா உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக தொடர்ந்து முன்னணியில் உள்ளது. அதனைத் தொடர்ந்து சீனா 20.85 டிரில்லியன் அமெரிக்க டாலருடனும், ஜெர்மனி 5.45 டிரில்லியன் அமெரிக்க டாலருடனும் அடுத்தடுத்த இடங்களில் இருந்தன

மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளின்படி, உலகளாவிய தரவரிசையில் இந்தியாவைத் தொடர்ந்து பிரான்ஸ் (3.6 டிரில்லியன் அமெரிக்க டாலர்), இத்தாலி (2.74 டிரில்லியன் அமெரிக்க டாலர்), ரஷ்யா (2.66 டிரில்லியன் அமெரிக்க டாலர்) மற்றும் பிரேசில் (2.64 டிரில்லியன் அமெரிக்க டாலர்) ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

நாணய வீழ்ச்சி காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பலவீனமடைந்ததால், டாலர் மதிப்பில் கணக்கிடப்படும் ஜிடிபி (GDP) கணக்கிடும் முறையில் செய்யப்பட்ட அடிப்படை ஆண்டு மாற்றங்களினால்

இந்தியா இந்த பின்னடைவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரமாக இருக்கும் நிலையில் இந்த தரவரிசை மாற்றம் தற்காலிகமானது என்றும், . 2031-க்குள் இந்தியா ஜெர்மனியை முந்தும்” என இந்தியாவின் பொருளாதார வல்லுநர்கள்நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
இல்லத்தரசிகள் இனி 'பிசினஸ் வுமன்': கைநிறைய சம்பாதிக்க 8 சூப்பர் ஐடியாக்கள்!
Indian economy
logo
Kalki Online
kalkionline.com