வரலாற்றில் முதன்முறை..! லக்னோ-டெல்லி தேஜஸ் எக்ஸ்பிரஸ் பெயர் மாற்றம்..!

ஸ்ப்ரைட் தேஜஸ் எக்ஸ்பிரஸ்
ஸ்ப்ரைட் தேஜஸ் எக்ஸ்பிரஸ்Source:twitter
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்னோ சந்திப்பு முதல் புது டெல்லி இடையே இயங்கும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 'ஸ்ப்ரைட்' (Sprite) என்ற வணிக பிராண்ட் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரு தனியார் வர்த்தக பிராண்டின் பெயரில் முழுமையாக அழைக்கப்படும் முதல் ரயில் சேவை இதுவாகும். கோகோ கோலாவின் ஸ்ப்ரைட் நிறுவனம் விளம்பரம் மற்றும் வெளிப்புற உறை உரிமைகளைப் பெற்றதைத் தொடர்ந்து இந்தியாவின் முதல் தனியார் பிராண்டட் ரயில் ஸ்ப்ரைட் தேஜஸ் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இயக்கப்பட உள்ளது. இந்த முயற்சி, ஸ்ப்ரைட் பிராண்டிங்கை வழக்கமான விளம்பரங்களுக்குள் மட்டும் கட்டுப்படுத்தாமல், ஒரு முழு ரயிலுடனும் தொடர்புபடுத்த வழி வகுக்கிறது. இந்த ஏற்பாடு ரயில்வே விளம்பரங்களுக்கு ஒரு புதிய வணிக வாய்ப்பை உருவாக்குகிறது.

லக்னோ - டெல்லி - லக்னோ தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலின் முழு வணிக விளம்பர மற்றும் பிராண்டிங் உரிமைகள் 'ஸ்ப்ரைட்' நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் ஐஆர்சிடிசி (IRCTC) நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களிலும், பயணத்தின் பொழுதும் இந்த ரயில் அதிகாரப்பூர்வமாக 'ஸ்ப்ரைட் தேஜஸ் எக்ஸ்பிரஸ்' என அறிவிக்கப்படும். இந்த விளம்பர முறை சில மாதங்களுக்கு செயலாக்கத்தில் இருக்கும்.

இதன் நோக்கம் முக்கியமான நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்து வழித்தடத்தில் அதிவேக, நவீன பயணிகள் வசதிகளை வழங்கும் அதே வேளையில், ஐஆர்சிடிசி / இந்திய ரயில்வேக்கு கட்டணமில்லா வருவாயை ஈட்டுவதற்காக ரயில் பிராண்டிங்கை வணிகமயமாக்குகிறது.

இதன் முக்கிய அம்சங்கள்:

ஒரு ரயிலுக்கு ஒரு பிராண்டின் பெயர் சூட்டப்படுவது இதுவே முதல் முறை. தனியார் ரயிலாக இருந்தாலும் தண்டவாளங்கள் மற்றும் நிலையங்கள் போன்ற இந்திய ரயில்வே கட்டமைப்புகள் வழக்கம் போலவே பயன்படுத்தப்படுகின்றன. ஐஆர்சிடிசி நிறுவனம் இதற்கான கட்டணங்களை இந்திய ரயில்வே துறைக்கு செலுத்துகிறது. ரயிலின் வெளிப்புறம் மற்றும் உட்புறம் முழுவதும் பிராண்டுக்கான விளம்பர வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

ஐஆர்சிடிசி, ரயில் விளம்பர உரிமைகளை ஸ்ப்ரைட் நிறுவனத்திற்கு ஆறு மாதங்களுக்கு வழங்கி உள்ளது. இந்த தனியார் ரயில், பயணத்தின் இருபுறங்களிலும் உள்ள புறப்படும் மற்றும் இடைவழி நிலையங்களில் 'ஸ்ப்ரைட் தேஜஸ் எக்ஸ்பிரஸ்' என்றே அறிவிக்கப்படும். இதைத் தொடர்ந்து 82501 / 82502 என்ற எண்ணிடப்பட்ட லக்னோ - டெல்லி - லக்னோ ஐஆர்சிடிசி தேஜஸ் எக்ஸ்பிரஸை ஆகஸ்ட் 19, 2026 முதல் நவம்பர் 11, 2026 வரை 'ஸ்ப்ரைட்' தேஜஸ் எக்ஸ்பிரஸ் என அறிவிக்க வேண்டும் என்று வடகிழக்கு ரயில்வேயிடம் தெரிவிக்கப்பட்டதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஸ்ப்ரைட் தேஜஸ் எக்ஸ்பிரஸ்
ஸ்ப்ரைட் தேஜஸ் எக்ஸ்பிரஸ்

நவீன LHB பெட்டிகள், உயர்தரமான உணவு /பான வசதிகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட பொழுதுபோக்குத் தகவல் அமைப்புகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் இந்த சேவை லக்னோவிற்கும் புது டெல்லிக்கும் இடையேயான சுமார் 512 கிலோ மீட்டர் வழித்தடத்தை ஏறத்தாழ 6 மணி 15 நிமிடங்களில் கடக்கிறது.

வருவாய் ஈட்டும் நடவடிக்கையாக, ரயில்வேயால் இயக்கப்படும் வழக்கமான ரயில்களின் பெட்டிகளின் வெளிப்புறத்தில் விளம்பரங்களை ஒட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தனியார் நிறுவனங்கள் ரயில்களில் தங்கள் பிராண்டைக் காட்சிப்படுத்த உதவுகிறது. ரயிலில் குழு முன்பதிவு அனுமதிக்கப்படுகிறது. நிறுவனக் கூட்டங்கள், திருமணங்கள், சமூக நிகழ்வுகள் போன்றவற்றில் கலந்து கொள்வதற்கு குழுக்களாக பயணம் செய்யும் பயணிகள், 78 இருக்கைகள் கொண்ட சேர் கார் பெட்டியை இதில் முன் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் ஒரு மூத்த ரயில்வே அதிகாரி கூறியுள்ளார்.

இது ரயில்வேயின் வருமானத்தை அதிகரிக்க உதவும். ஜப்பானில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காக, அவர்களின் கலாச்சாரத்தையும் புகழ்பெற்ற அனிமேக்களையும் சித்தரிக்கும் விமானங்களும் ரயில்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
சென்னையில் வருகிறது ‘வாட்டர் மெட்ரோ’!: பக்கிங்காம் கால்வாயில் அதிநவீன படகு போக்குவரத்து..!
ஸ்ப்ரைட் தேஜஸ் எக்ஸ்பிரஸ்
logo
Kalki Online
kalkionline.com