2050ம் ஆண்டில் அதிக முஸ்லீம்கள் இருக்கும் நாடாக இந்தியா மாற வாய்ப்பு… இரண்டாவது மூன்றாவது எந்த நாடுகள் தெரியுமா? – வெளியான அறிக்கை!

Islam
Islam
Published on

பியூ ரிசர்ச் சென்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வரும் 2050ம் ஆண்டில் உலகில் அதிக முஸ்லீம்கள் இருக்கும் நாடாக இந்தியா மாறும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இந்தியா பலதரப்பட்ட மக்கள் வாழும் ஒரு நாடாகும். இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதங்களும் இருக்கும் நாடாகவும், அவர்களின் கலாச்சாரம் மற்றும் நம்பிக்கைகளை மதிக்கும் நாடாகவும், சம உரிமைகள் வழங்கும் நாடாகவும் இந்தியா இருந்து வருகிறது. இந்தநிலையில், 2050ல் எந்த நாட்டில் அதிக முஸ்லிம்கள் வசிப்பார்கள் என்ற அறிக்கையை பியூ ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்தியா 311 மில்லியன் முஸ்லீம் மக்கள் தொகையை வரும் 2050ம் ஆண்டிற்குள் எட்டிவிடும் என்றும், இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் 273 மில்லியன் மக்கள் தொகையுடனும் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாவது இடத்தில் இந்தோனேஷியா 257 மில்லியன் முஸ்லிம் மக்கள் தொகையுடன் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2050ம் ஆண்டு இந்தியாவில் 311 மில்லியன் முஸ்லிம் மக்கள் தொகைகள் என்பது மொத்த மக்கள் தொகையில் 11 சதவிகிதமாகும். இந்தியா தொடர்ந்து மிகப்பெரிய இந்து மக்கள் தொகையைக் கொண்டிருக்கும், இது 1.03 பில்லியனாக அதிகரிக்கும் என்று அறிக்கை கூறுகிறது. தற்போது, ​​இந்தோனேசியாவில் அதிக முஸ்லிம் மக்கள் தொகை உள்ளது.

இதையும் படியுங்கள்:
சத்தான பாசிப்பயறு தண்டுக்கீரை கிரேவி சமைக்கலாம் வாங்க..!
Islam

வளர்ந்து  வரும் முஸ்லீம் மக்கள் தொகைக்கு காரணம் அதிக இளம் வயதுடையோர் மற்றும் அதிக கருவுறுதல் விகிதங்கள் காரணம் என்று தெரியவந்துள்ளது. 2010ல், மொத்த மக்கள் தொகையில் 14.4% முஸ்லிம்கள் இருந்தனர். இது 2050ல் 18.4% ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேஷியா, நைஜீரியா மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் உள்ள முஸ்லிம் மக்கள்தொகையை விட இந்தியாவின் இந்து மக்கள் தொகை அதிகமாக இருக்கும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அதேபோல் கிறிஸ்தவ மக்கள் தொகையை பொறுத்தவரை, மொத்த மக்கள் தொகையில் 2.5% ஆக இருக்கும் இந்தியாவின் கிறிஸ்தவ மக்கள் தொகை 2050-ல் 2.3% ஆக குறையும் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இதையும் படியுங்கள்:
ஏற்காட்டில் கடும் குளிர்...பொதுமக்கள் அவதி!
Islam

அதேபோல் இந்த அறிக்கையில் மற்றொன்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது உலகில் வேகமாக வளர்ந்து வரும் மதங்களில் இஸ்லாம் முதல் இடத்தில் இருப்பதாக தெரிவித்திருக்கிறது. தற்போது அதிகம் மக்கள் தொகை மதமாக கிறிஸ்தவம் உள்ளது. அடுத்ததாக இஸ்லாம் உள்ளது. ஆனால், இந்த நூற்றாண்டின் இறுதியில் இஸ்லாம் முதல் இடத்திற்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. உலகளவில் பெரும்பாலான முஸ்லிம்கள் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் வாழ்கின்றனர். இது சுமார் 72% ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com