4 ஆண்டுகளுக்குப் பின்னர் நீங்கிய கோதுமை ஏற்றுமதி தடை : விவசாயிகள் மகிழ்ச்சி..!

கோதுமை, ஆட்டா, மைதா ஏற்றுமதி தடை நீக்கம்!: மத்திய அரசு அதிரடி உத்தரவு - விவசாயிகள் மகிழ்ச்சி!
Wheat
Wheat
Updated on

கோதுமை மாவு மற்றும் அது சார்ந்த பொருட்களுக்கான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை மத்திய அரசு திங்களன்று உடனடியாக நீக்கியுள்ளது; இதன் மூலம் ஆட்டா, மைதா, ரவை மற்றும் கோதுமை சார்ந்த பிற பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வர்த்தகப் பொது இயக்குநரகம் (DGFT) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கோதுமை மாவு மற்றும் அது சார்ந்த பொருட்களுக்கான ஏற்றுமதி கொள்கையில் அரசு உடனடியாக அமலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்துள்ளது. மேலும், DGFT வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில், குறிப்பிட்ட சில வகை கோதுமை மற்றும் துரம் (durum) கோதுமை வகைகளுக்கான ஏற்றுமதி கொள்கையை 'தடைசெய்யப்பட்டவை' என்ற நிலையிலிருந்து 'தடையற்றவை' என்ற நிலைக்கு அரசு மாற்றியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியா கோதுமை ஏற்றுமதியை அனுமதிக்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் உள்பட பல நாடுகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

கோதுமை மட்டுமல்லாமல், மைதா, ரவை, ஆட்டா மற்றும் முழு கோதுமை மாவு போன்றவற்றுக்கும் தடை நீக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் கோதுமை கையிருப்பு போதுமான அளவில் உள்ளதாலும், விநியோகம் சீராக இருப்பதாலும், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் இந்திய கோதுமை விற்பனை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

கோதுமை மாவு, மைதா, ரவை, ஆட்டா உள்ளிட்ட கோதுமை சார்ந்த பொருள்களை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையைக் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசு நீக்கியுள்ளது தான் இந்த தகவலின் சிறப்பு.

மத்திய அரசு, 2022 ஜூலை 12 அன்று கோதுமை ஏற்றுமதியை நிறுத்த முடிவு செய்திருந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஆண்டுக்கு 5 மில்லியன் டன்கள் என்ற உச்சவரம்பை நிர்ணயித்து, ஏற்றுமதிக்கு பகுதியளவு மட்டுமே அனுமதி அளித்திருந்தது. இதன் பின்னணியில் இருந்தது

ரஷ்யா-உக்ரேன் போர். இந்த மோதல் காரணமாக அனைத்துலகச் சந்தையில் கோதுமை விலை கிட்டத்தட்ட 40 விழுக்காடுவரை கூடியது.

அத்துடன் உலகில் நான்கில் ஒரு பங்கு கோதுமை வணிகம் கருங்கடல் பகுதியில் நடைபெற்று வந்த நிலையில் அங்கு நிலவிய போரால் விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. உலகளாவிய இந்த விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்பை ஈடுசெய்யும் நோக்கில் இந்தியா ஏற்றுமதியை அதிகரித்தது. இதன் காரணமாக இந்திய உள்நாட்டுச் சந்தையில் கோதுமை மற்றும் கோதுமை மாவின் விலை சுமித் 40% வரை வெகுவாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்தே உணவுப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கடந்த 2022 ஜூலை 12ஆம் தேதி கோதுமை சார்ந்த பொருள்களின் ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடைவிதிக்கும் முடிவை அறிவித்தது.

தடை நீக்கம் அறிவிப்பிற்கு முன்னதாக,இவ்வாண்டு தொடக்கத்தில் சா்வதேச தேவையை கருத்தில் கொண்டு அந்தக் கட்டுப்பாட்டைத் தளர்த்தி, ஆண்டிற்கு ஐந்து மில்லியன் டன் வரை மட்டும் கோதுமை சார்ந்த பொருள்களை ஏற்றுமதி செய்யலாம் என அனுமதி வழங்கப்பட்டது. கடந்த மாா்ச் மாத நிலவரப்படி அரசிடம் 22.2 மில்லியன் டன் கோதுமை இருப்பு உள்ளது என்றும் இந்த ஆண்டு 110.65 மில்லியன் டன் கோதுமை உற்பத்தியாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2024-25 சாகுபடிப் பருவ விளைச்சலைவிட சற்று அதிகமாகும் என்றும் குறிப்புகள் கூறிகின்றன.

தற்போது உள்நாட்டுத் தேவைக்கான கையிருப்பு போதுமான அளவில் இருப்பதால், அரசாங்கம் இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது

இதன்மூலம் கோதுமை சார்ந்த அனைத்துப் பொருள்களின் ஏற்றுமதியும் தடையின்றி இயல்புநிலைக்குத் திரும்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கோதுமை ஏற்றுமதி தடை நீக்கம் இந்தியாவின் உள்நாட்டு விலையைக் நேரடியாகக் குறைக்குமா என்ற கேள்விக்கு இல்லை என்பதுதான் பதில். மாறாக இது விவசாயிகளின் வருமானத்தைப் பாதுகாக்கவும், அதிகப்படியான உபரி இருப்பைக் கையாளவும் உதவும் என கருதப்படுகிறது.

ஏற்றுமதித் தடை நீக்கத்தின் தாக்கமாக உள்நாட்டு விலை நிலைத்தன்மை பெறும் வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் கோதுமை உற்பத்தி சாதனை அளவை எட்டியுள்ளதாலும், உணவுப் பொருள் கையிருப்பு அதிகமாக இருப்பதாலும், உள்நாட்டு விலையில் பெரிய மாற்றம் இருக்காது. அதேபோல் விலை குறையவும் வாய்ப்பில்லை.

ஆனால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிப்பதால், உள்ளூர் சந்தையில் விலை கடும் சரிவைச் சந்திப்பதைத் தடுக்க முடியும். இது விவசாயிகளுக்கு நியாயமான விலையைப் பெற்றுத் தரும் என்பதால் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தருகிறது தகவலாக உள்ளது.

உக்ரைன் - ரஷ்ய போர் போன்ற காரணங்களால் உலகளவில் கோதுமை விலை அதிகமாக உள்ளது. இருப்பினும், போக்குவரத்துச் செலவுகள் மற்றும் சர்வதேச விலையைப் பொறுத்தே இந்திய ஏற்றுமதியின் லாபம் அமையும் எனவும் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

மொத்தத்தில் அரசின் இந்த நடவடிக்கையால் கோதுமை விவசாயிகளும் ஏற்றுமதியாளர்களும் வெளிநாட்டு சந்தைகளில் பொருட்களை விற்பனை செய்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக மகிழ்வுடன் தெரிவிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
விஜயகாந்த் உயிரோடு இருந்திருந்தால் அவர் தான் தமிழக முதல்வர்.! - நடிகர் மீசை ராஜேந்திரன் உருக்கம்!
Wheat
logo
Kalki Online
kalkionline.com