

மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தபால் துறையில் பணி செய்ய வேண்டும் என்பது பல லட்சம் தேர்வர்களின் லட்சியமாக உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள தபால் நிலையங்களில் அருமையான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய தபால் துறை (India Post), நாடு முழுவதும் உள்ள பல்வேறு தபால் வட்டங்களில் காலியாக உள்ள 25,000க்கும் மேற்பட்ட கிராம அஞ்சல் சேவகர் (GDS) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தபால் அலுவலகங்களில் கிராம் டக் சேவக்ஸ் என்ற தபால் அலுவலர் (BPM) மற்றும் உதவி தபால் அலுவலர் (ABPM/ DakSevak) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம், தகுதிகள், காலியிடங்களின் விவரம், எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம்.
தபால் வேலை- பணியிடங்கள் விவரம்:
நாடு முழுவதும் 25,000ம் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் காலியிடங்களின் எண்ணிக்கை – 2,095
விண்ணப்பிக்க கடைசி தேதி, ஒருமுறை பதிவு(One-Time Registration): ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 19 வரை (மாலை 5 மணிக்குள்).
ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்: செப்டம்பர் 2-ம்தேதி முதல் (மாலை 5 மணி முதல்).
விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 21-ம்தேதி வரை (மாலை 5 மணி வரை).
விண்ணப்பத் திருத்தம் (Correction Window): செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 24 வரை (மாலை 5 மணி வரை).
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://indiapostgdsonline.gov.in/ அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் முறை: விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாகத் தங்களது கட்டணத்தைச் செலுத்தலாம். ஒருமுறை செலுத்தப்பட்ட கட்டணம் எக்காரணம் கொண்டும் திருப்பித் தரப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: 21.09.2026 தேதிப்படி விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி எஸ்.சி/ எஸ்.டி பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதுமானது. எழுத்து தேர்வு கிடையாது. 10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் உள்ளூர் மொழி பாடங்களை முதன்மைப் பாடங்களாகப் படித்திருப்பது கட்டாயமாகும்.
அதாவது தமிழ்நாட்டில் உள்ள பணியிடத்திற்கு 10-ம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக படித்து இருக்க வேண்டும். கணிணி அறிவு மற்றும் சைக்கிள் ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும்.
சம்பளம்: தேர்ந்தெடுக்கப்படும் ஊழியர்களுக்கு TRCA (Time Related Continuity Allowance) ஊதியத்தில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆண்டுதோறும் 3% ஊதிய உயர்வு வழங்கப்படும். இது தவிர, அகவிலைப்படி, GDS பணிக்கொடை மற்றும் சேவை விடுவிப்பு பலன் திட்டம் போன்ற சமூக பாதுகாப்பு பலன்களுக்கும் இவர்கள் தகுதியுடையவர்கள்.
தபால் அலுவலர் (BPM) மாதம் ரூ. 12,000 முதல் 29,380 வரை சம்பளம் வழங்கப்படும்.
உதவி தபால் அலுவலர் (ABPM/DakSevak) மாதம் ரூ.10,000 முதல் ரூ.24,470 வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேர்வர்களின் கல்வித் தகுதி, பணியிடங்கள், தேர்வு முறை, அறிவிக்கை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் முழுமையாகக் காண https://indiapost.gov.in/gdsonlineengagement மற்றும் https://www.indiapost.gov.in/gdsonlineengagement/pdf/descriptive-notification.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.