

தபால் நிலையங்களில் ஒருமுறை பணம் செலுத்தி 70 வயது வரை விபத்து காப்பீடு பெறலாம் என்று திருவண்ணாமலை அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தபால் நிலையங்கள் மற்றும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB) இணைந்து வழங்கும் விபத்து காப்பீட்டுத் திட்டங்களில் (PMSBY மற்றும் பிற குரூப் பாலிசிகள்) சேர 18 முதல் 70 வயது வரை உள்ளவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர்.
ஒவ்வொரு குடிமகனுக்கும் காப்பீடு வசதியை வழங்குவதே மத்திய அரசினல் நோக்கமாகும். இதற்காக மத்திய அரசால் குறைந்த பிரீமியத்தில் கொண்டுவரப்பட்ட விபத்து காப்பீடு திட்டம் தான் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டம்(Pradhan Mantri Suraksha Bima Yojana-PMSBY) ஆகும்.
இந்த திட்டத்தில் 18 வயது முதல் 70 வயது வரை உள்ளவர்கள் ஆண்டு பிரீமியம் ரூ.20 செலுத்தி விபத்து காப்பீடு பெறலாம். குறிப்பிட்ட வருடச் சந்தா (ஆண்டு பிரீமியம்) மட்டுமே செலுத்த வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டத்தைப் பொறுத்து பிரீமியம் (ரூ. 12 அல்லது ரூ. 399 முதல் ரூ. 755 வரை) மாறுபடும்.
விபத்தினால் ஏற்படும் மரணம், உறுப்பு இழப்பு மற்றும் முழு/பகுதி இயலாமை ஆகியவற்றுக்கு ரூ. 2 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படுகிறது. அதன்படி விபத்தில் பகுதியாக ஊனம் ஏற்பட்டால் காப்பீடு தொகையாக ரூ.1 லட்சம் பெற முடியும். விபத்தில் மரணம் ஏற்பட்டாலோ, முழு நிரந்தர ஊனம் ஏற்பட்டாலோ காப்பீடு தொகையாக ரூ.2 லட்சம் பெறலாம்.
விபத்தினால் மரணம், நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் (அதிக பட்சம் இரண்டு குழந்தைகள்) கல்வி செலவுகளுக்கு, ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு தினப்படி தொகை ஒரு நாளுக்கு அதிக பட்சம், ஆயிரம் ரூபாய் வீதம், 15 நாட்களுக்கு வழங்கப்படும். விபத்தினால் உயிரிழக்க நேரிட்டால் ஈமக்கிரியைகள் செய்ய, 5,000 ரூபாய் வரை வழங்கப்படும்.
சில பிரீமியம் திட்டங்களில் மருத்துவமனைச் செலவுகள், கல்வி உதவி மற்றும் தினசரி மருத்துவச் செலவுகளுக்கான கவரேஜ் போன்ற சிறப்பம்சங்களும் அடங்கும்.
இந்த காப்பீடு திட்டத்தில் சேருவதற்கு அஞ்சல் அலுவலகத்தில் 18 வயது நிரம்பிய மற்றும் 70 வயதிற்கு உட்பட்ட பொதுமக்கள் ஒருமுறை ரூ.550 செலுத்தி அஞ்சலக சேமிப்பு கணக்கு மட்டுமே தொடங்கி வாடிக்கையாளர் தனது 70 வயது வரையில் அக்கணக்கில் மேற்கொண்டு எந்த பணமும் செலுத்தாமல் ரூ.2 லட்சத்திற்கு விபத்து காப்பீடு பெறலாம்.
10 லட்சம் அல்லது 15 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்யும் வசதி உள்ளது.
அதாவது குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிப்பதன் மூலம் அஞ்சலக சேமிப்பு கணக்கிற்கான வருடாந்திர வட்டியாக குறைந்தபட்சம் ரூ.20 கிடைக்கும்.
அதே தொகை பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தின் பிரீமியமாக தானாகவே கழித்து கொள்ளப்படும். சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்பட்டாலோ அல்லது இத்திட்டத்தின் பிரீமியத்தொகையில் மாற்றம் செய்யப்பட்டாலோ அதற்கு ஏற்றார் போல் சேமிப்பு கணக்கில் இருப்பு தொகையை கணக்குதாரர் மாற்றம் செய்து தொடர்ந்து பணம் செலுத்தாமல் இக்காப்பீட்டு வசதியை தொடர்ந்து பெறலாம்.
இந்த சிறப்பான திட்டத்தில் சேர விரும்பும் பொதுமக்கள், திருவண்ணாமலை உட்பட உங்கள் அருகில் உள்ள எந்தவொரு அஞ்சலகத்தையோ அல்லது தபால்காரரையோ (Postman) அணுகி, ஆதார் கார்டு நகல்(Aadhaar), பான் கார்டு நகல் அல்லது பார்ம்-97, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-2, ரூ.550 செலுத்தி 5 நிமிடங்களில் இந்த விபத்து காப்பீட்டுத் திட்டத்தில் எளிதாக இணைந்து கொள்ளலாம். காகித பயன்பாடின்றி தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனம் பயன்படுத்தி, ஐந்து நிமிடங்களில் டிஜிட்டல் முறையில் பாலிசி வழங்கப்படும்.
உங்களிடம் தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு இருந்தால் உங்களின் ஆதார் அட்டை (Aadhaar) மற்றும் சேமிப்பு கணக்கு மூலம் இந்த விபத்து காப்பீட்டுத் திட்டத்தில் இணையலாம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டுமல்ல மாநிலம் முழுவதும் விருப்பம் உள்ள அனைவரும் இந்த விபத்து காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம்.