தனியார் வங்கிகளை விட இந்தியன் வங்கியில் நகைக்கடன் வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்...சுவாரஸ்மான பின்னணி..!!

இந்தியன் வங்கியில் தங்க நகையை அடமானம் வைத்து கடன் வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம் வாங்க...
Indian-bank
Indian-bank
Published on

இந்தியாவின் தலைசிறந்த அரசு வங்கிகளில் ஒன்றாகக் கருதப்பட்டு, இந்தியன் வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்குப் பலவிதமான சலுகைகளையும் ஊக்கத்தொகைகளையும் வழங்குகிறது.

தங்கக் கடன் என்பது ஒரு பாதுகாப்பான கடனாகும், இதில் நீங்கள் தனிப்பட்ட அல்லது வணிகத் தேவைகளுக்கான நிதியைப் பெற தங்க நகைகள் அல்லது நாணயங்களை அடகு வைத்து பணம் வாங்க முடியும்.

அந்த வகையில் இந்தியன் வங்கி தங்கக் கடன் என்பது வங்கி தனது வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப அதன் செயல்பாடுகளை சீரமைக்க எடுத்த மற்றொரு முக்கிய நடவடிக்கையாகும். இந்தியன் வங்கியில் தங்கக் கடனுக்காக பல திட்டங்கள் உள்ளன.

தங்கத்தின் விலை அதிகரித்துகொண்டே வரும் நிலையில் தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

முன்பெல்லாம் மக்கள் தனியார் நிறுவனங்களில் தங்க நகைக்கடன் வாங்கி வந்தனர். ஏனெனில் அங்கு தான் நகைக்கு ஈடாக அதிகளவு பணத்தை கடனாக கொடுத்தனர்.

ஆனால் வட்டி அதிகம். தங்க நகைக்கடன் அதிகமாக கிடைப்பதால் மக்கள் வட்டி அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை, என்ற எண்ணத்தில் கடன் வாங்கினார்.

இதையும் படியுங்கள்:
தங்க நகைக்கடன் அதிரடி உயர்வு: கூட்டுறவு வங்கிகளில் ஒரு கிராமுக்கு ரூ.7000! - வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!
Indian-bank

ஆனால் தற்போது கூட்டுறவு வங்கிகளை போன்றே, பொதுத்துறை வங்கிகளான பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் தங்க நகையை அடகு வைக்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இதற்கு காரணம் வட்டியும் குறைவு, அதிகளவு தங்க நகைக்கடனும் கிடைக்கிறது என்பதால் தான்.

அதிலும் குறிப்பாக இந்தியன் வங்கியில் மக்கள் தங்க நகையை அடகு வைப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அதற்கு காரணம் தனியார் வங்கிகளே கூட தர தயங்கும் பணத்தை இந்தியன் வங்கி தருகிறது என்பதால் தான். குறிப்பாக நகையின் மதிப்பில் 85 சதவீதம் வரை அதாவது, கிராமுக்கு 9 ஆயிரத்திற்கு மேல் தங்க நகைக்கு கடன் தருவதால் தான் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் இந்தியன் வங்கி நகைகளை அடமானம் வைக்க விரும்புகிறார்கள்.

எனவே தனியார் வங்கிகளில் தங்க நகைக்கடனுக்கு அதிகளவு பணம் தருகிறார்கள் என்று அடகு வைத்து நகையை இழப்பதைவிட இந்தியன் வங்கியில் குறைந்த வட்டியில், அதிக பணத்துக்கு அடகு வைக்க முடியும் என்பதால் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

மேலும் இந்தியன் வங்கி அரசுடமையாக்கப்பட்ட வங்கி என்பதால் தாங்கள் அடகு வைக்கும் தங்கம் பாதுகாப்பாக இருக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும் மக்களிடம் இருக்கிறது.

அதுமட்டுமின்றி சேட்டுகள், சில தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளுடன் ஒப்பிடும் போது இந்தியன் வங்கியில் நகைக் கடனுக்கான வட்டி விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது. நகை மதிப்பில் அதிகபட்சமாக எவ்வளவு பணம் கடன் கிடைக்கும் என்பதில் இந்தியன் வங்கி மற்ற வங்கிகளை விட முன்னணியில் இருக்கிறது.

இந்தியன் வங்கியில் விவசாய தங்கக் கடன் மிகவும் பிரபலம். அக்ரி கோல்டு லோன் (விவசாய தங்கக் கடன்) என்பது விவசாயிகள் தங்கள் விவசாயத் தேவைகளுக்காக தங்க நகைகளை அடகு வைத்து, சாதாரண தங்கக் கடனை விடக் குறைவான வட்டி விகிதத்தில் பெறும் கடனாகும். விவசாயிகளுக்கு சுமார் 7 சதவீதம் என்கிற மிகக் குறைந்த வட்டியில் கடன் வழங்குவதுடன், 3 லட்சம் வரை எந்த ஆவணமும் இன்றி விவசாய நகைக் கடனை ஏழைகள் வாங்க முடியும்.

அதேபோல் எம்எஸ்எம்இயில் தங்க நகை கடனை 8.70% வட்டியில் வாங்க முடியும். இந்த விகிதம் சற்று மாறுபடலாம். அக்ரி லோனில் தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் வாங்கும்போது வட்டி குறைவு என்பதுடன், அதிக பணமும் கிடைக்கும்.

இந்தியன் வங்கியில் தங்க நகைக்கடன் பெறுவதற்கு வருமானச் சான்றிதழ் அல்லது சிபில் ஸ்கோர் போன்ற சிக்கலான ஆவணங்கள் எதையும் கேட்பதில்லை. 21 முதல் 70 வயது வரை உள்ள அனைவரும் இந்தக் கடனுக்குத் தகுதியுடையவர்கள். உங்களுடைய ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு இருந்தால் போதும், அரைமணி நேரத்திலேயே நகையை அடமானம் வைத்து பணத்தை பெற்றிட முடியும்.

மேலும் உங்களிடமிருந்து வெளிப்படுத்தப்படாத அல்லது எதிர்பார்க்கப்படாத கூடுதல் கட்டணங்கள் எதையும் நீங்கள் செலுத்த வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் முழு விண்ணப்பம், பணம் செலுத்துதல் மற்றும் திருப்பிச் செலுத்தும் நடைமுறை ஆகியவை நேரடியானது மற்றும் தொந்தரவு இல்லாதது.

இந்தியன் வங்கியின் தங்க நகைக்கடனை திருப்பிச் செலுத்தும் விதிமுறைகள் மிகவும் எளிமையானது என்பதால், அவை கடன் வாங்குபவர்களுக்கு மிகவும் வசதியாக உள்ளது. கடன் விண்ணப்பம் மற்றும் வழங்கல் செயல்முறைகள் இரண்டும் நம்பமுடியாத அளவிற்கு எளிமையானவை.

இதையும் படியுங்கள்:
இந்தியன் வங்கியின் முக்கிய அறிவிப்பு...அரிய வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க..!
Indian-bank

மேலும், இங்கு வட்டி மற்றும் அசலை 12 மாதங்கள் கழித்து ஒரே தவணையாகச் செலுத்தும் வசதி உள்ளதால் விவசாயிகளுக்கும், சிறு வணிகர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கிறது. கூட்டுறவு வங்கியை போல் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டினால் வட்டி குறைந்து அசலும் குறைவதால் மக்களுக்கு இந்தியன் வங்கியை பிடிக்க காரணமாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com