நீல நிறத்தில் இருந்து 'காவி' நிறத்திற்கு மாறிய இந்திய ஹாக்கி அணி ஜெர்சி!

ஆகஸ்ட் 15 முதல் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் தொடக்கம்; நிற மாற்றத்திற்கான காரணத்தை விளக்கியது 'ஹாக்கி இந்தியா'!
இந்திய ஹாக்கி அணி காவி ஜெர்சி
இந்திய ஹாக்கி அணி காவி ஜெர்சிsource:DTNEXT
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு நடத்தும் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வருகிற ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெற இருக்கிறது. இத்தொடரில் மொத்தமாக 16 அணிகள் ஏ, பி, சி, டி என நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஹாக்கியை தேசிய விளையாட்டாகக் கொண்ட இந்தியா, வேல்ஸ், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றுடன் 'டி' பிரிவில் இடம்பெற்றுள்ளது. உலகக்கோப்பை ஹாக்கி தொடருக்கான 20 பேர் கொண்ட இந்திய அணி கடந்த ஜூலை 21ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட்டது.

இந்திய ஹாக்கி அணி இதுவரை நீல கலர் உடை அணிந்துதான் விளையாடிக் கொண்டிருந்தது. ஆனால் திடீரென அதன் உடை காவி நிறத்திற்கு மாற்றப்பட்டு இருக்கிறது. ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள எஃப்.ஐ.எச் (FIH) உலகக்கோப்பையில் இந்திய ஹாக்கி அணியின் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு அணிகளும் தங்களது பாரம்பரிய நீல நிற உடைகளுக்கு பதிலாக காவி நிற ஜெர்சியை அணிவார்கள் என்று ஹாக்கி இந்தியா தெரிவித்துள்ளது. அத்துடன் இதனை உறுதிப்படுத்தும் விதமாக வீடியோ ஒன்றையும் கடந்த 27ஆம் தேதி அன்று, ஹாக்கி இந்தியா நிர்வாகம் சமூக ஊடகங்களில் வெளியிட்டது. இந்திய ஹாக்கி அணியின் காவி நிறம் மாற்றப்பட்டதற்கான காரணத்தையும் தெளிவாக விளக்கியுள்ளது.

ஹாக்கி மைதானங்களும், வீரர்களின் ஜெர்சியும் ஒரே நீல நிறத்தில் இருப்பதால், பந்தை பாஸ் செய்வது, வீரர்களை அடையாளம் காண்பது சிரமமாக இருப்பதாக பயிற்சியாளர்களும், வீரர்களும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்காக மாற்று நிறங்களாக மஞ்சள் அல்லது காவி நிறத்தைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டதாகவும் அதில் காவி இந்தியாவின் தேசியக் கொடியில் இருப்பதால் தைரியம், தியாகம் மற்றும் தேசிய பெருமிதத்தை அடையாளப்படுத்துவதால் அந்த நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஹாக்கி இந்தியா விளக்கம் அளித்துள்ளது.

அதாவது சர்வதேச ஹாக்கி போட்டிகளில் பயன்படுத்தப்படும் செயற்கை நீல நிற ஆடுகளத்தில், வீரர்களின் நீல நிற ஜெர்சி ஒன்றிணைந்து தெரிவதால் பந்தைக் கண்டறிவதிலும் வீரர்களை அடையாளம் காண்பதிலும் சிரமம் ஏற்பட்டது. இந்த சிரமத்தைத் தவிர்க்க வீரர்களும் பயிற்சியாளர்களும் மஞ்சள் அல்லது காவி நிறங்களைப் பரிந்துரைத்தனர். தேசியக் கொடியின் அடையாளமாகவும் வீரர்களின் தேசப்பற்றைக் குறிக்கும் வகையிலும் காவி நிறம் இருந்ததால் அது தேர்ந்தெடுக்கப்பட்டது.

புதிய ஜெர்ஸியில் கலாச்சார பாரம்பரியத்தைக் குறிக்கும் மண்டல வடிவமைப்பு மற்றும் அசோக சக்கரத்தால் ஈர்க்கப்பட்ட அடர் நீல நிறக் கூறுகள் சேர்க்கப்பட்டுள்ளன. அணியின் நீண்டகால அடையாளமான நீல நிறத்தை மாற்றுவதற்கு முன்னாள் கேப்டன் விரேன் ரஸ்கின்ஹா மற்றும் சில அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்திய ஹாக்கி அணி காவி ஜெர்சி
இந்திய ஹாக்கி அணி காவி ஜெர்சிsource:indiatoday

உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் விளையாடும் இந்திய அணியின் ஆடவர் மற்றும் பெண்கள் ஹாக்கி அணிகள் தங்களின் பாரம்பரியமிக்க நீல நிற ஜெர்சிக்கு பதிலாக முழுவதுமான காவி நிற ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி இருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக இதற்கு பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளன. அதற்கு தான் இந்திய ஹாக்கி மேற்கூறிய விளக்கத்தை அளித்துள்ளது.

இந்த விவகாரத்தில் ஜெர்சியின் நிறம் மாற்றப்பட்டது குறித்து இந்திய ஹாக்கி அணித் தரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அணியின் நீண்டகால அடையாளம் மற்றும் பாரம்பரியத்தைக் கைவிடுவது நல்லதல்ல என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விரேன் ரஸ்கின்ஹா தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆடை நெறிமுறைகள் மற்றும் கல்விக் கொள்கைகள் மூலமாக வரலாற்றை மீண்டும் மாற்றி எழுத மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு முன்பு 2014-ல் மஞ்சள் நிறத்திலும், 2018ல் வெளிறிய நீல நிறத்திலும் ஜெர்சிகள் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
2026 உலகக் கோப்பை கால்பந்து: நெகிழ வைக்கும் தருணங்கள் & உணர்ச்சிப்பூர்வமான சம்பவங்கள்!
இந்திய ஹாக்கி அணி காவி ஜெர்சி
logo
Kalki Online
kalkionline.com