

நம்மில் பலருக்கு சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் முதலில் ஞாபகம் வருவது ரயில் பயணம் தான். இது வெறும் போக்குவரத்து மட்டுமல்லாமல், நாட்டின் கலாச்சாரத்தை, மற்றும் இயற்கை அழகை நெருக்கமாக அனுபவிக்கும் ஒரு வழியாகும்.சில ரயில் பயணங்கள், அவற்றின் கண்கவர் காட்சிகள் மற்றும் தனித்துவமான அனுபவங்களால் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்கின்றன.
ரயில் பயணம் அமைதியானது. ரயிலின் மெதுவான அசைவு பயணிகளின் மனதிற்கு நிம்மதியைத் தருகிறது.ரயில் பயணம் பஸ், கார், பயணங்களை விட சௌகரியமானது, பாதுகாப்பானது, சுவாரசியமானது.ரயில் பயணம், விமானம் அல்லது பேருந்து பயணத்தைவிட மலிவானது.
பயணிகள் இன்றும் ஏன் ரயில்களால் ஈர்க்கப் படுகிறார்கள் தெரியுமா? பாலைவனங்கள் மற்றும் காடுகள் முதல் மலைகள் வரை இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை அனுபவிக்க முடியும்.பட்ஜெட்டுக்கு ஏற்ற பயணமாக இருக்கிறது.
ரயிலில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள், ஒரு சில ரயில்வே துறையின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.ஒவ்வொரு பயணிகளும் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான இந்திய ரயில்வே விதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ரயில் பயணத்தின் போது தீப்பிடிக்க கூடிய பொருட்களை எடுத்து செல்ல கூடாது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் நாம் வீட்டிலும், ஆன்மீக வழிபாடுகளிலும் பயன்படுத்தும் ஒரு சாதாரண தேங்காயும் ரயில் பயணத்தில் தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
கொப்பரை தேங்காயை கொண்டு செல்வது சட்டப்படி குற்றமாகும்.மீறி எடுத்து சென்றால் அபராதத்துடன் சிறைத்தண்டனையும் கிடைக்க வாய்ப்புள்ளது.
கொப்பரைத் தேங்காயை கொண்டு செல்வது சட்டப்படி குற்றமாகும்.மீறி எடுத்து சென்றால் அபராதத்துடன் சிறைத்தண்டனையும் கிடைக்க வாய்ப்புள்ளது. அதுவே பச்சை தேங்காயையோ அல்லது இளநீரையோ ரயிலில் கொண்டு செல்ல எவ்வித தடையும் இல்லை.
என்ன நம்ப முடியலையா..? வாங்க தெரிஞ்சிக்கலாம்...
நாரைக் கொண்ட கொப்பரை தேங்காய்கள் மிக எளிதில் தீப்பற்றக்கூடிய தன்மையுடையவை ஆகும். ரயிலின் நெரிசலான பெட்டிகளில் மூட்டைகளாகவோ அல்லது பயணிகளின் லக்கேஜ்களாகவோ எடுத்து செல்லப்படும் போது, அவை ஒன்றோடொன்று உராயும் வாய்ப்பு அதிகளவில் உள்ளது. மேலும், ரயில்களில் ஏற்படும் சிறு மின்சாரப் பொறிகள் (Electric sparks) அல்லது வெப்பம் காரணமாக, இந்த உலர்ந்த தேங்காய் நார் நொடிப் பொழுதில் தீப்பிடித்து எரியக்கூடிய ஆபத்து நிலவுகிறது.இத்தகைய சூழல் மிகப்பெரிய தீ விபத்திற்கு வழிவகுத்து, பயணிகளின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதால், ரயில்வே பாதுகாப்பு விதிகளின்படி ஆபத்தான பொருட்களின் பட்டியலில் உலர் தேங்காய் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த விதியை மீறி உலர்ந்த தேங்காயை ரயிலில் எடுத்துச் சென்று பிடிபட்டால், ரயில்வே சட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ, 10,000 வரை அபராதமோ அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படலாம். இத்தகைய பொருட்களால் ரயிலில் ஏதேனும் விபத்து அல்லது சேதம் ஏற்பட்டால், அதற்கு ஏற்படும் முழு இழப்பீட்டையும் சம்பந்தப்பட்ட பயணியே ஏற்க வேண்டியிருக்கும்.
அதே போல் (Paints), தின்னர்கள் (Thinners) மற்றும் வார்னிஷ் போன்ற பொருட்களை ரயிலில் லக்கேஜாக எடுத்துச் செல்ல இந்திய ரயில்வே சட்டப்படி கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான பெயிண்ட்கள் மற்றும் தின்னர்களில் ஆல்கஹால், பெட்ரோலியக் வேதிப்பொருட்கள் (Solvents) கலந்துள்ளதால், அவை எளிதில் தீப்பற்றக்கூடிய (Flammable) தன்மையுடையவை ரயிலின் நெரிசலான பெட்டிகளில் அதிக வெப்பம் அல்லது சிறு மின்சாரப் பொறிகள் (Sparks) ஏற்படும் போது, பெயிண்ட் டப்பாக்கள் வெடித்துச் சிதறிப் மிகப்பெரிய தீ விபத்தை ஏற்படுத்தக்கூடும்.
பெயிண்ட்களில் இருந்து வெளியேறும் கடுமையான வேதி இரசாயன வாயுக்கள் ரயிலின் மூடப்பட்ட ஏசி (AC) பெட்டிகளில் பயணிகளுக்கு மூச்சுத்திணறல் மற்றும் மயக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
ரயிலில் எடுத்துச் செல்லக் கூடாத தடை செய்யப்பட்ட பொருட்கள் பட்டியல்:
வெடிபொருட்கள் & பட்டாசுகள்: தீபாவளி மற்றும் பண்டிகைக் காலங்களில் கொண்டு செல்லப்படும் பட்டாசுகள், மத்தாப்புகள் மற்றும் வெடிமருந்துகள்.
எரிவாயு சிலிண்டர்கள்: காலியான அல்லது நிரப்பப்பட்ட கேஸ் சிலிண்டர்கள் மற்றும் கேஸ் அடுப்புகள்.
எரியக்கூடிய திரவங்கள்: பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், ஆசிட் (அமிலங்கள்) மற்றும் பெயிண்ட்/தின்னர்கள்.
உலர்ந்த புல் & கழிவு காகிதங்கள்: எளிதில் தீப்பற்றக்கூடிய காய்ந்த சருகுகள், புல் மற்றும் கட்டுக்கட்டாக இருக்கும் கழிவு காகிதங்கள்.
துர்நாற்றம் வீசும் & ஆபத்தான பொருட்கள்: கெட்டுப்போன உணவுகள், கழிவுகள், இரசாயனப் பொருட்கள் (Phenyl, Bleaching Powder).
சமையல் செய்யப் பயன்படும் சாதனங்கள்: ரயிலுக்குள் ஸ்டவ் அல்லது கேஸ் பயன்படுத்திச் சமையல் செய்வதற்கான உபகரணங்கள்.அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக நெய்/எண்ணெய்: நெய் போன்றவற்றை 20 கிலோவிற்கு அதிகமாகவோ அல்லது கசியும் வகையிலோ கொண்டு செல்லக் கூடாது.
ஆயுதங்கள் & வெடிமருந்துகள்: உரிய உரிமம் மற்றும் அனுமதியின்றி ஆயுதங்களைக் கொண்டு செல்வது குற்றம்.