ஜூலை 1-ம்தேதி முதல் இந்தியன் ரெயில்வே கொண்டு வரும் அதிரடி மாற்றங்கள்...

இந்தியன் ரெயில்வே ஜூலை 1-ந்தேதி முதல் பல்வேறு மாற்றங்களை செய்ய உள்ளதாக தொடர்ச்சியாக அறிவித்து வருகிறது.
INDIAN RAILWAY
INDIAN RAILWAY
Published on

ஆதார் இணைப்பு, கட்டண உயர்வு அறிவிப்புகளை தொடர்ந்து காத்திருப்போர் பட்டியல் டிக்கெட்டிலும் ஜூலை 1-ம்தேதி முதல் மாற்றங்களை கொண்டுவர ரெயில்வே முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய ரெயில்வே துறையில் தெற்கு ரெயில்வே, வடக்கு ரெயில்வே, கொங்கன் ரயில்வே என 18 மண்டலங்கள் உள்ளன.

இவற்றின் மூலம் தினசரி 13 ஆயிரத்துக்கும் அதிகமான எக்ஸ்பிரஸ் ரெயில்களும், 8 ஆயிரத்துக்கும் அதிகமான சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் இந்தியன் ரெயில்வே ஜூலை 1-ந்தேதி முதல் பல்வேறு மாற்றங்களை செய்ய உள்ளதாக தொடர்ச்சியாக அறிவித்து வருகிறது. ஐ.ஆர்.சி.டி.சி. (இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம்) இணையதளத்தின் மூலம் தட்கல் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஆதாரை இணைக்க வேண்டும் என்பது நாளை முதல் (ஜூலை 1-ந்தேதி) கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்:
கோடைகால சிறப்பு ரெயில் சேவை இந்திய ரயில்வே அறிவிப்பு!
INDIAN RAILWAY

அதன்படி ஜூலை 1-ந்தேதி முதல் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மற்றும் செல்போன் செயலியில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஏற்கனவே, ஆதார் உறுதிப்படுத்திய பயனர்களால் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.

அதேபோல் ஜூலை 15-ந்தேதி முதல், ஆதாருடன் ஓ.டி.பி. எண்ணை உறுதி செய்யும் நடைமுறையும் அமல்படுத்தப்பட இருக்கிறது. அதிகாரப்பூர்வ ரெயில் டிக்கெட் முன்பதிவு கவுண்ட்டர்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற முகவர்களின் செல்போனுக்கு அனுப்பப்படும் ‘ஓ.டி.பி.’யை உறுதிப்படுத்திய பின்னரே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். போலி ஐ.ஆர்.சி.டி.சி.

மேலும், அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், தட்கல் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு தொடங்கிய நேரத்தில் இருந்து முதல் 30 நிமிடங்கள் வரை உள்நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

அதன்படி, ‘ஏ.சி.' பெட்டிகளில் காலை 10 மணி முதல் 10:30 மணி வரையிலும், சாதாரண படுக்கை வசதிகொண்ட பெட்டிகளுக்கு காலை 11 மணி முதல் 11:30 மணி வரை பொதுமக்கள் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இணையதள கணக்குகளால் தட்கல் முன்பதிவு டிக்கெட் பெறுவதில் பயணிகள் பெரும் சிக்கலை சந்தித்து வந்தனர்.

இந்த புதிய நடைமுறையால் பொதுமக்கள் முன்பதிவு டிக்கெட்டை எளிதாக பெற முடியும் என ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுவும் ஜூலை 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதேபோல ரெயில்களில் பயணம் செய்வதற்கான உறுதி செய்யப்பட்ட இருக்கை ஒதுக்கீடு தொடர்பான விவரம் (ரிசர்வேசன் சார்ட்) ரெயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்னதாக வெளியிடப்பட உள்ளது.

மெயில், எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கான கட்டணம் ஜூலை மாதம் முதல் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஏ.சி. வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோ மீட்டருக்கு 2 பைசாவும், ஏ.சி. அல்லாத சாதாரண வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோ மீட்டருக்கு 1 பைசாவும், 500 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்யும் 2-ம் வகுப்பு டிக்கெட் பயணிகளுக்கு அரை பைசா கூடுதலாகவும் உயர்த்தப்படுகிறது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதே நேரம் புறநகர் ரெயில்கள் மற்றும் 500 கிலோ மீட்டருக்கு குறைவான தொலைவு செல்லும் 2-ம் வகுப்பு டிக்கெட் பயணிகளுக்கு கட்டண உயர்வு இருக்காது என்றும், மாதாந்திர சீசன் டிக்கெட் வாங்கி பயன்படுத்துவோருக்கும் எந்த ஒரு கட்டணம் மாற்றமும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த வரிசையில் டிக்கெட் முன்பதிவு செய்து இருக்கை ஒதுக்கீட்டுக்காக காத்திருக்கும், காத்திருப்போர் பட்டியலிலும் ஜூலை மாதம் முதல் மாற்றங்களை கொண்டு வருவதற்கு ரெயில்வே திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, ஒரு ரெயிலுக்கு தற்போது வழங்கப்படுவதில் இருந்து 25 சதவீதம் அளவுக்கு காத்திருப்போர் பட்டியலில் வழங்கப்படும் டிக்கெட்டுகளின் எண்ணிக்கை குறைக்கப்பட உள்ளது. பயணிகள் விவர மேலாண்மை திட்டத்தினை ஆய்வு செய்து ரெயில்வே இந்த முடிவினை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்தவகையில், அதிகமாக டிக்கெட்டுகள் ரத்துசெய்யப்படும் ரெயில்களில் காத்திருப்போர் பட்டியலில் அதிகமாகவும், குறைவாக டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படும் ரெயில்களில் காத்திருப்போர் பட்டியல் குறைவாகவும் டிக்கெட்டுகள் வழங்கப்படும்.

இதையும் படியுங்கள்:
உயரும் ரெயில் கட்டணம்... அதிர்ச்சியில் பயணிகள்!
INDIAN RAILWAY

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான காத்திருப்போர் பட்டியல் டிக்கெட் வழங்கப்பட்ட பின்னர், டிக்கெட் வழங்க முடியாததற்கு வருந்துகிறோம் என்பதை குறிக்கும் வாசகம் இடம்பெற உள்ளது. இதனால் பயணிகளுக்கு ரெயிலில் இருக்கை ஒதுக்கீடு செய்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். இந்த நடைமுறையையும் ஜூலை 1-ந்தேதி முதல் அமல்படுத்த ரெயில்வே முடிவெடுத்து உள்ளதாக ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com