சாட்ஜிபிடியையே ஓரம் கட்டிய இந்தியன் ஆயில்! – கூகுள் பிளே ஸ்டோரில் முதலிடம்..!

indianoil one app
indianoil one app
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

கூகுள் பிளே ஸ்டோர் தரவரிசை தரவுகளின் படி இந்தியன் ஆயில் ஒன் செயலி முதல் இடத்தில் உள்ளது. சாட்ஜிபிடி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் எல்பிஜி(LPG) பற்றாக்குறை மற்றும் எரிபொருள் நிரப்புவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பலர் தங்கள் சமையல் எரிவாயுவை முன்பதிவு செய்யவும், முன்பதிவு நிலையை கண்காணிக்கவும் Indian Oil ONE செயலியை பதிவிறக்கம் செய்கின்றனர். இதனால் இந்த செயலி இப்பொழுது கூகுள் பிளே ஸ்டோரில் சாட் ஜிபிடியை முந்தி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஈரான் அமெரிக்கப் போரால் சர்வதேச அளவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால் எண்ணெய் கப்பல்கள் அந்த வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவோ தனது எரிபொருள் தேவைக்கு பெருமளவில் இறக்குமதியை நம்பியுள்ளது. இதனால் ஈரான் அமெரிக்கா போரால் இந்தியாவில் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைத்தாலும் மக்கள் அதிக பயத்தின் காரணமாக அதிகளவில் புக்கிங் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

ஹோட்டல்கள் பல வணிக சிலிண்டர்களின் கட்டுப்பாடு காரணமாக மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிக பீதியில் வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களை புக்கிங் செய்ய ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் செல்போன் எண் மூலம் புக் செய்ய முடியவில்லை என்று கூறி ஆயில் நிறுவனங்களின் செயலியை பதிவிறக்கம் செய்து புக்கிங் செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் கூகுள் பிளே ஸ்டோரில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட செயலிகள் பட்டியலில் இந்தியன் ஆயில் ஒன் செயலி முதலிடத்தில் உள்ளது.

கூகுள் பிளே ஸ்டோர் தரவரிசை தரவுகளின் படி இந்தியன் ஆயில் ஒன் 4.4 மதிப்பெற்று முதல் இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் சாட்ஜிபிடி இப்பொழுது 4.6 மதிப்பீட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் இந்தியன் ஆயில் ஒன் செயலி நம்பர் 1 ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்:
30 ஆண்டுகளுக்குப் பின்.! தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்தல் தேதியில் இதை கவனித்தீர்களா.?
indianoil one app
logo
Kalki Online
kalkionline.com