இந்தியாவின் முதல் ஜென்பீட்டா கிட் இவர் தான்!

Gen beta baby
Gen beta baby
Published on

இந்தியாவின் முதல் ஜென் பீட்டா தலைமுறை குழந்தை யார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2025ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்கு பின்னர் பிறக்கும் குழந்தைகள் புதிய தலைமுறையினர் என்றும், அவர்கள் ஜென் (ஜெனரேஷன்) பீட்டா என்று அழைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பலரும் தற்போது 80ஸ் கிட்ஸ், 90ஸ் கிட்ஸ், 2k என்று கூறி வருகிறார்கள். இது ஒவ்வொரு தலைமுறையினரையும் குறிக்கிறது. சமீபக்காலமாக Genz என்ற வார்த்தையை பயன்படுத்தி வருவது நம் அனைவருக்குமே தெரியும். அதாவது குறிப்பிட்ட சில ஆண்டிலிருந்து சில ஆண்டு வரை பிறந்த குழந்தைகளை நாம் Genz என்று அழைப்போம்.

1989 முதல் 1996 வரையிலான தலைமுறையை மில்லியனியல் என்றும், 1996 முதல் 2010 வரையிலான தலைமுறையை ஜெனரேஷன் இசட் என்றும் 2010 - 2024 ஆம் ஆண்டு பிறந்தவர்களை ஜெனரேஷன் ஆல்பா என்றும் கூறப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்:
'ஒரு குழந்தையே போதும்' - தமிழ்நாட்டில் சரிந்து வரும் பிறப்பு விகிதம்
Gen beta baby

இப்படி 19ம் நூற்றாண்டுகளிலிருந்தே தலைமுறைகளுக்கு பெயர் சூட்டப்பட்டாகிவிட்டது. ஆனால், நமக்கு இந்த ஆண்டு முதல்தான் Genz என்ற வார்த்தைமூலம் இந்த விஷயம் தெரிய வந்திருக்கிறது. அந்தவகையில் தற்போது அடுத்த தலைமுறைக்கான ஆண்டுகளும் பெயரும் வெளியாகியிருக்கிறது. 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் பிறக்கும் குழந்தைகள் ஜென் (ஜெனரேஷன்) பீட்டா என்று கூறப்படும் நிலையில், இந்த தலைமுறையினர் பெரும்பாலும் ஜென் ஆல்பா மற்றும் ஜென் இசட்டுகளின் வாரிசுகளாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில், இந்தியாவின் முதல் ஜென் பீட்டா தலைமுறை குழந்தை ஜன.1 அன்று மிசோரமில் பிறந்தது.

2025 ஜனவரி ஒன்று அதிகாலை 12 மணிக்கு பிறகு பிறக்கும் அனைத்து குழந்தைகளும் ஜென் பீட்டா தலைமுறை என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஜென் பீட்டா உலகின் 7 ஆவது தலைமுறையாகும். தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு, பன்முகத்தன்மையின் சிறப்பான பங்களிப்பு, இந்த தலைமுறைக்கு கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
சென்னையில் அறிமுகமான ஸ்மார்ட் கார்டு திட்டம்… இனி எளிதாக பயணம் செய்யலாம்!
Gen beta baby

இந்நிலையில் இந்தியாவின் முதல் ஜென் பீட்டா தலைமுறை குழந்தை ஜன.1 அன்று மிசோரமில் பிறந்துள்ளது. ஐஸ்வாலில் உள்ள டர்ட்லாங்க்ஸ் சினோட் மருத்துவமனையில் பிறந்த ஃபிரான்கி ரெம்ருதிகா ஸடெங்தான் ஜென் பீட்டா தலைமுறையின் முதல் குழந்தை ஆவார். 3.12 கிலோ எடையுடன் இவர் ஜனவரி 1ஆம் தேதி அதிகாலை 12:03 மணிக்கு பிறந்தார். 2025 மற்றும் 2039க்கு இடையில் பிறக்கும் குழந்தைகளை வரையறுக்க ஜென் பீட்டா என்ற சொல்லை ஃபியூச்சரிஸ்ட் மார்க் மெக்ரிண்டில் உருவாக்கினார். 2035 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் இந்த ஜென் பீட்டா தலைமுறையினர் 16 சதவீதமாக இருப்பர் எனவும் கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com