மக்களே உஷார்..! ரயில்வே தகவல்களுக்கு இந்த செயலிகளை நம்பி ஏமாற வேண்டாம்..!

ரெயில்வே தகவல்களை பெற அதிகாரப்பூர்வ செயலியை பயன்படுத்த வேண்டும் என்று ரெயில்வே பாதுகாப்பு படையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
INDIAN RAILWAY
INDIAN RAILWAY
Published on

பெரும்பாலான இந்திய மக்களின் வாழ்வில் ரெயில் பயணம் ஒரு அன்றாட அங்கமாகவே மாறிவிட்டது. கல்வி கற்க, வேலைக்கு செல்ல, வீட்டிற்கு செல்ல, சுற்றுலாச் செல்ல என நாள்தோறும் கோடிக்கணக்கான பயணிகள் இந்திய ரெயில்வேயில் பயணம் செய்கிறார்கள். ஆனால் நாள்தோறும் அவர்கள் சில பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் இந்திய ரெயில்வே பயணிகளுக்கு சிறந்த உதவி மற்றும் ஆதரவை வழங்குவதற்காக பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில், ரெயில் நிலையங்களில் ரெயில்கள் புறப்படும் நேரம், நடைமேடை விவரம் மற்றும் ரெயில்களின் வருகை உள்ளிட்ட பல தகவல்கள் தற்போது இணையதளம் வாயிலாகவே எளிதில் அறிந்து கொள்ள முடியும் என்பதால் பெரும்பாலான பயணிகள் இத்தகைய இணையதளங்களுக்கு சென்று தெரிந்து கொள்கின்றனர்.

அதன்படி, இணையதளத்தில் ரெயில்வே செயலிகள் மட்டுமன்றி சில தனியார் செயலிகள் மூலமும் ரெயில்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

ஆனால் ரெயில்வே செயலிகளை விட தனியார் செயலிகளில் ரெயில்களின் புறப்பாடு, நடைமேடைகள் குறித்த விவரம் உள்ளிட்டவை முன்னதாகவே அறியும் வகையில் உள்ளதால் பெரும்பாலான மக்கள் தனியார் செயலியையே அதிகம் பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமின்றி ரெயில்வே செயலிகள் மிகவும் மெதுவாக வேலை செய்வதால் தனியார் செயலிகள் மக்களின் விருப்ப தேர்வாகவே மாறிவிட்டது என்று சொல்லலாம்.

இதையும் படியுங்கள்:
ரெயில்களில் இனி இதை செய்தால்... எச்சரிக்கை விடுத்த தெற்கு ரெயில்வே...!
INDIAN RAILWAY

இந்நிலையில் சமீபகாலமாக தனியார் செயலிகள் மூலம் வழங்கப்படும் தகவல்கள் தவறாக உள்ளதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். அதாவது தனியார் செயலிகள் மூலம் வழங்கப்படும் ரெயில்கள் புறப்படும் நேரம், நடைமேடை விவரம் உள்ளிட்டவை பெரும்பாலான நேரங்களில் தவறாக இருப்பதால், இது பயணிகளை ஏமாற்றமடைய செய்வதாகவும், அதனால் ரெயில்களை தவறவிட்டும், அவசர அவசரமாக ரெயில் நடைமேடைகள் கண்டுபிடித்து ரெயிலில் ஏற முயற்சி செய்யும் அவல நிலையும் நிகழ்வதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதுபோல தினமும் ஏராளமான பயணிகள் தனியார் செயலிகளின் தவறான தகவல்களால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க தனியால் செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என்று ரெயில்வே பாதுகாப்பு படையினர் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

ரெயில்வே தகவல்களைப் பெற,'இந்தியன் ரயில்வே என்கொயரி', 'UTS ஆன் மொபைல்' (UTS on Mobile) அல்லது 'Rail Madad', ‘நேசனல் ரெயில்வே என்கொயரி' போன்ற அதிகாரப்பூர்வ செயலிகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் இதுபோன்ற சில செயலிகள் மூலமே ரெயில்கள் குறித்த நம்பகமான விவரங்களை வெளியிடப்படுகின்றன என்றும் அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இது, யூகத்தின் அடிப்படையில் தகவல்களை வெளியிடும் தனியார் செயலிகளை போல் இல்லாமல், நம்பகமான மற்றும் சரியான தகவல்களைப் பெறுவதை உறுதிசெய்யும் என பாதுகாப்புப் படையினர் அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் பல தனியார் செயலிகள் யூகத்தின் அடிப்படையில் தகவல்களை வெளியிடுவதால், ரெயில் பயணிகள் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். எனவே ரெயில்வே துறையின் அதிகாரப்பூர்வ செயலிகளில் மட்டுமே தகவல் பெற பயன்படுத்த வேண்டும் என்று பாதுகாப்புப் படையினர் கூறியுள்ளனர்.

‘நேசனல் ரெயில்வே என்கொயரி' செயலியில் நாடு முழுவதும் ரெயில்களின் வருகை, புறப்படும் நேரம், வழித்தடம், ரெயில்கள் வரும் நடைமேடை, ரெயில்களின் சேவையில் மாற்றம், ரெயில்கள் ரத்து தொடர்பான தகவல்கள் இடம் பெறும்.

அதேபோல் முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டுகளைப் பெறுவதற்கு 'UTS ஆன் மொபைல்' ஒரு அதிகாரப்பூர்வ செயலி உதவும்.

ரெயில் தொடர்பான புகார்களைப் பதிவு செய்வதற்கும், தீர்வைக் கண்டறிவதற்கும் Rail Madad என்ற செயலியின் பயன்பாடு உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
ஜூலை 1-ம்தேதி முதல் இந்தியன் ரெயில்வே கொண்டு வரும் அதிரடி மாற்றங்கள்...
INDIAN RAILWAY

SwaRail ரெயில் டிக்கெட் முன்பதிவு, முன்பதிவு நிலை அறிதல், உணவு ஆர்டர் செய்தல் போன்ற பல்வேறு சேவைகளுக்காக SwaRail என்ற செயலியை இந்திய ரெயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com