அடுத்த 48 மணிநேரம் மிக முக்கியம்.! அதிர வைக்கும் உளவுத்துறை ரிப்போர்ட்.!

Intelligence Report
TamilnaduTamilnadu
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள சூழலில், அதிகபட்சமாக தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. இருப்பினும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால், கூட்டணியில் இணைய மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் விஜய்.

இதன்படி நேற்று தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ் ஆதரவளித்துள்ள நிலையில், தவெக-வின் பலம் 113 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் ராஜினாமா செய்தால், தவெக-வின் பலம் 112 ஆக குறையும்.

தற்போது தவெக ஆட்சி அமைக்க மேலும் 6 எம்எல்ஏக்கள் தேவை என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தவெக-விற்கு அடுத்து ஆதரவு தரப்போவது யார் என்று கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும் என்பதால் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆளுநரை நேற்று சந்தித்த விஜய், ஆட்சி அமைக்க அழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து இன்று விஜய் ஆட்சி அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த சூழலில், இந்த விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆட்சி அமைக்க இன்னும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், இன்று காலை தலைமை அலுவலகம் பனையூரில் தவெக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காத இந்த சூழலில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு பிரச்சினை ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக உளவுத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் எனவும் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க ஆளுநர் தவெக தலைவர் விஜய்யை இதுவரை அழைக்காத சூழலில், கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த, காவல்துறை திட்டமிட்டுள்ளது

இதையும் படியுங்கள்:
இனி ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது..! மோசடி நிதி நிறுவனங்களை கண்டறிய தனிப்படை அமைத்தது தமிழக காவல் துறை..!
Intelligence Report

தேர்தல் முடிவுகளுக்கு முன்பு, தவெக இந்த தேர்தலில் தோல்வியுற்றால் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் தவறான முடிவெடுக்க வாய்ப்புள்ளது என தேர்தல் ஆணையம் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் அதிக தொகுதிகளை வென்று முதல் இடத்தில் இருக்கும் தவெக ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காத சூழலில், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக உளவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை, தமிழக அரசியல் சூழலை மேலும் பரபரப்பாகியுள்ளது.

மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிந்தும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க 60 நாட்களுக்கு, 144 தடை உத்தரவுடன் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய் முதல்வராக பதவியேற்கும் வரை தமிழ்நாட்டில் பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறை திட்டமிட்டு வருகிறது

இதையும் படியுங்கள்:
இளநீர் குடிக்கணும்னா இனி யோசிக்கனும் போல.. கிடுகிடுவென உயர்ந்த விலை..!!
Intelligence Report
logo
Kalki Online
kalkionline.com