

இந்தியாவில் உள்ள நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களுக்குப் பாதுகாப்பான முதலீடு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது போஸ்ட் ஆபீஸ் சேமிப்புத் திட்டங்கள்தான். இன்றைய காலகட்டத்தில், அனைவரும் சிறிய முதலீட்டிலிருந்து பெரிய நிதியை உருவாக்க உதவும் திட்டங்களிய பெரிதும் விரும்புகிறார்கள். எனவே சிறிய அளவிலான, வழக்கமான சேமிப்பிலிருந்து பெரிய நிதியை உருவாக்க, தொடர் வைப்புத்தொகை (RD) (Recurring Deposit - RD)பல ஆண்டுகளாக பிரபலமான விருப்பமாக இருந்து வருகிறது. இந்திய தபால் அலுவலகம் நடத்தும் RD திட்டம் உங்கள் முதலீட்டைப் பாதுகாப்பாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், அதில் பெறப்படும் கூட்டு வட்டி உங்கள் பணத்தை விரைவாக பெருக்கவும் உதவுகிறது. அதுமட்டுமின்றி வங்கி டெபாசிட்களை விடப் போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் ரிஸ்க் மிகக் குறைவு என்பதாலும், மத்திய அரசின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதாலும் மக்கள் இதில் முதலீடு செய்ய அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
எந்தவித ரிஸ்க்கும் இல்லாமல் குறைந்த தொகையை முதலீடு செய்து பெரிய தொகையை பெற விரும்பினால், போஸ்ட் ஆபீசின் தொடர் வைப்புத் திட்டம் உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.
போஸ்ட் ஆபீசின் RD திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். இதற்குப் பெறப்படும் வட்டி விகிதம் காலாண்டு அடிப்படையில் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது, RD திட்டத்திற்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு சுமார் 6.7% மட்டுமில்லாமல் டெபாசிட் செய்யப்பட்ட பணத்திற்கு கூட்டு வட்டியை வழங்குகிறது. அதாவது வட்டிக்கு வட்டியும் கிடைக்கும், இதன் காரணமாக உங்கள் நிதி வேகமாக வளர்கிறது.
எனவே, நீங்கள் போஸ்ட் ஆபீஸ் RD-யில் ஒவ்வொரு மாதமும் 2200 ரூபாயை 60 மாதங்களுக்கு (5 ஆண்டுகள்) முதலீடு செய்தால், உங்கள் மொத்த முதலீடு மற்றும் வருமானம் எவ்வளவு இருக்கும் தெரியுமா?
உங்களின் மாதாந்திர முதலீடு: ரூ.2200
மொத்த காலம்: 60 மாதங்கள் (5 ஆண்டுகள்)
மதிப்பிடப்பட்ட வட்டி விகிதம் (தற்போதைய விகிதத்தில்): ஆண்டுக்கு 6.7%
மொத்த வைப்புத் தொகை: ரூ.2200 x 60 மாதங்கள் : சுமார் ரூ.1,32,000
மதிப்பிடப்பட்ட வட்டி வருவாய்: சுமார் ரூ.24,000
முதிர்ச்சியின் போது மொத்த நிதி: ரூ.1,32,000 + ரூ.24,000 : சுமார் ரூ.1,56,000
இதில் முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் உங்கள் பாக்கெட்டிலிருந்து ரூ.1.32 லட்சத்தை மட்டுமே முதலீடு செய்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு சுமார் ரூ.1,56,000 பெற முடியும் என்பது தெளிவாகிறது.
எந்த ஆபத்தும் இல்லாமல் எப்போதும் ஒரு பெரிய நிதியை உருவாக்க விரும்புவோருக்கு தபால் அலுவலக RD ஒரு மிகச் சிறந்த வழி என்பது தெளிவாகிறது. நடுத்தர மற்றும் சாமானிய மக்களுக்கு ரூ.2200 போன்ற ஒரு சிறிய மாதாந்திர முதலீடு கூட 5 ஆண்டுகளில் நல்ல வருமானத்தைத் தரும். இந்தத் திட்டம் உங்கள் நிதி இலக்குகளை அடையவும் வலுவான நிதி எதிர்காலத்தை உருவாக்கவும் உதவுகிறது. மேலும்,
அவசரத் தேவைகளுக்காக உங்கள் கணக்கில் உள்ள தொகையில் 50 சதவீதம் வரை கடனாகப் பெற்றுக் கொள்ளும் வசதியும் உள்ளது.
நீங்கள் உங்கள் வீட்டின் அருகாமையில் உள்ள எந்தவொரு தபால் நிலையத்திலும் வெறும் 100 ரூபாய் முதற்கொண்டே இந்தக் கணக்கைத் தொடங்கலாம்..
5 ஆண்டு காலம் இருந்தாலும், 3 ஆண்டுகளில் முதிர்வுக்கு முன்பே கணக்கை மூடலாம்.
அருகிலுள்ள தபால் நிலையத்திற்குச் சென்று, விண்ணப்பப் படிவம், ஆதார், பான் கார்டு மற்றும் புகைப்படம் சமர்ப்பித்து, ஒரு சேமிப்புக் கணக்கை தொடங்கி, இந்த RD கணக்கில் நீங்கள் மாதந்தோறும் ₹2,200 பணத்தை டெபாசிட் செய்யலாம்.
பணவீக்கம் அதிகரித்து வரும் இக்காலத்தில், வீண் செலவுகளைக் குறைத்து மாதம் 2,200 ரூபாயை சேமிப்பது என்பது உங்கள் எதிர்காலத் தேவை, குழந்தைகளின் கல்வி அல்லது சிறு தொழில் தொடங்க ஒரு ஊக்கத்தொகையாக அமையும்.