மத்திய கிழக்கில் ஈரான் தாக்குதல்: இந்தியாவுக்கு என்ன பாதிப்பு? சிலிண்டருக்கு சிக்கல் வருமா.?

ஹார்மூஸில் போர் தீ; எரிபொருள் தட்டுப்பாடு வருமா?
போர் பதற்றம்
Iran War
Updated on

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தொடர் தாக்குதல்களால் தற்போது மீண்டும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி இரு நாடுகளுக்கும் இடையே தொடங்கிய போர், கடந்த மாதம் அமைதி ஒப்பந்தத்தின்படி முடிவுக்கு வந்தது. இதன்படி ஹார்மூஸ் நீரினையில் எண்ணெய் கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி அளித்தது. இதன் காரணமாக உலக நாடுகளில் எரிசக்தி தட்டுப்பாடு முடிவுக்கு வந்து, மெல்ல மெல்ல நிலைமை சீரானது.

இந்நிலையில் ஹார்மூஸ் நீரினையில் எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனை வன்மையாக கண்டிக்கும் நோக்கத்தில் அமெரிக்கா, ஈரான் மீது தொடர் தாக்குதல் நடததியது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. மேலும் ஹார்மூஸ் நீரினையில் எண்ணெய் கப்பல்கள் மீது நடத்திய தாக்குதலில், இந்திய மாலுமி ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், ஹார்மூஸில் உள்ள இந்திய மாலுமிகள் அனைவரும் உடனடியாக வெளியேறும் படி மத்திய அரசு உத்தரவிட்டது. அதோடு எண்ணெய் கப்பல்களில் மாலுமிகளை அனுப்பக்கூடாது என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

இதையும் படியுங்கள்:
முடிகிறதா ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் பயணம்..?? அதிர்ச்சி தகவல்..!
போர் பதற்றம்

ஒருபுறம் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இன்று (ஜூலை 18) காலை சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்க ராணுவத் தடங்களின் மீது தாக்குதலை நடத்தியது ஈரான். இதன் மூலம் கடந்த நான்கு மாதங்களுக்குப் பிறகு சவூதி அரேபியாவின் மீது நேரடி தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான். மேலும் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதிலும் தொடர் தாக்குதலையும் விரிவுப்படுத்தியுள்ளது. இதன்படி பஹ்ரைன், குவைத், கத்தார், ஜோர்டான், ஈராக் மற்றும் குவைத் உள்ளிட்ட நாடுகளின் மீது தாக்குதலை கடுமையாக்கியுள்ளது ஈரான்.

கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் இணைந்து நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, தொடர்ச்சியான மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் மோதலானது ‘வாழ்வா-சாவா’ என்ற கடுமையான நிலையை எட்டியுள்ளதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகள் மீதான ஈரானின் இந்தத் தாக்குதல்களை ஓமன் மற்றும் சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மிகக் கடுமையாக கண்டித்துள்ளன. இந்தத் உலகளாவிய சட்டங்களுக்கும், ஐநா சபையின் கொள்கைகளுக்கும் எதிரானது என சவூதி அரேபியா வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மீண்டும் ஏற்பட்டுள்ள இந்தப் போர்ச் சூழல் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது மட்டுமின்றி, சர்வதேச பாதுகாப்பு மற்றும் எரிபொருள் விநியோகத்திலும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

போர் பதற்றம்
Iran War
இதையும் படியுங்கள்:
காலையிலேயே ஷாக்.. தங்கம் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.!
போர் பதற்றம்

மத்திய கிழக்கு நாடுகள் மீதான தாக்குதலை ஈரான் விரிவுபடுத்திய நிலையில், அமெரிக்காவும் பதிலடி கொடுக்க காத்திருக்கிறது. மீண்டும் போர் பதற்றம் உருவாகியுள்ள சூழலில், ஹார்மூஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்கள் தடையின்றி செல்வது தடுக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஹார்மூஸ் மீதான கட்டுப்பாடுகளை ஈரான் கடுமையாக்கினால், அதன் விளைவு உலக நாடுகளை கடுமையாக பாதிக்கும்.

ஏற்கனவே உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, மெல்ல மெல்ல சீரடைந்து வரும் நிலையில், மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது. குறிப்பாக இந்தப் போர் பதற்றம் பாகிஸ்தான் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளை கடுமையாக பாதிக்கும்.

கடந்த முறை போர் பதற்றம் அதிகமாக இருந்த சமயத்தில் இந்தியாவில் சிலிண்டர் விநியோகத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட். தற்போது இந்தக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கும் நிலையில், மீண்டும் சிலிண்டர் மீதான கட்டுப்பாடுகள் அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

logo
Kalki Online
kalkionline.com