

தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக சரிவையே சந்தித்து வருகிறது. கடந்த 1 மாதத்தைப் பொறுத்தவரை விலை சரிந்த நாட்கள் தான் அதிகம்.
ஒவ்வொரு வாரத்திலும் அதிகபட்சமாக 2 நாட்கள் மட்டுமே சிறிய அளவில் உயரந்து வருகிறது தங்கத்தின் விலை. இருப்பினும் விலையில் பெரிய அளவிலான மாற்றம் இல்லையென்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இல்லத்தரசிகள் பலரும் தங்கத்தின் விலை எப்போது ரூ.1 லட்சத்திற்கு கீழே வரும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அடுத்த ஒரு மாதத்தில் தங்கத்தின் விலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். அது விலை உயர்வா அல்லது சரிவா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
நேற்று (ஜூலை 17) தங்கத்தின் விலை ரூ.400 குறைந்த நிலையில், வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 குறைந்தது. இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,04,800-க்கும், ஒரு கிராம் ரூ.13,100-க்கும் விற்பனையானது. 1 கிராம் வெள்ளி ரூ.235-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.2,35,000-க்கும் விற்பனையானது.
நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூலை 18) தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.280 உயர்ந்து, ரூ.1,05,080-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.35 உயர்ந்து ரூ.13,135-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,35,000-க்கு விற்பனையாகிறது.
2025-ம் ஆண்டு இதே ஜூலை 18-ல் 1 சவரன் தங்கம் ரூ.72,880-க்கும், 1 கிராம் ரூ.9,110-க்கும் விற்பனையானது. 2025 ஜூலை 18-ல் 1 கிராம் வெள்ளி ரூ.125-க்கு விற்பனையானது.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையோடு இதனை ஒப்பிட்டுப் பார்த்தால், வெறும் ஒரே ஆண்டு இடைவெளியில் யாருமே எதிர்பார்க்காத வகையில் உச்சத்தை சந்தித்துள்ளது. இந்த எதிராபாராத விலை உயர்வால் தான், தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்வதை பொருளாதார நிபுணர்கள் பலரும் ஊக்குவிக்கிறார்கள்
கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விற்பனை விலை நிலவரம்:
ஜூலை 17: 1 கிராம் - ரூ.13,100 1 சவரன் ரூ.1,04,800
ஜூலை 16: 1 கிராம் - ரூ.13,150 1 சவரன் ரூ.1,05,200
ஜூலை 15: 1 கிராம் - ரூ.13,180 1 சவரன் ரூ.1,05,440
ஜூலை 14: 1 கிராம் - ரூ.13,150 1 சவரன் ரூ.1,05,200
ஜூலை 13: 1 கிராம் - ரூ.13,200 1 சவரன் ரூ.1,05,600
கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விற்பனை விலை நிலவரம்:
ஜூலை 17: 1 கிராம் - ரூ.235
ஜூலை 16: 1 கிராம் - ரூ.240
ஜூலை 15: 1 கிராம் - ரூ.240
ஜூலை 14: 1 கிராம் - ரூ.235
ஜூலை 13: 1 கிராம் - ரூ.240
நிச்சயமாக வருங்காலத்தில் தங்கத்தின் விலை உயரும் என்ற கணிப்பே முதலீட்டுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் வெள்ளி விலை இனி உயர்வது சற்று கடினம் என்றே சொல்லப்படுகிறது. ஏனெனில் வெள்ளி விலை உயர்ந்தால், ஒரே அடியாக உயர்ந்து விடும். அதுவே சரிந்தால் பலமடங்கு வீழ்ச்சியை சந்திக்கும்.
இந்த ஆண்டிலேயே வெள்ளி விலை உச்சபட்சமாக ஒரு கிராம் ரூ.430 வரை உயர்ந்ததை யாரும் மறக்க வேண்டாம். இப்போது இதன் விலை தற்போது பாதியாக சரிந்துள்ளது
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.