

IRCTC-யில் காலியாக உள்ள Hospitality Monitors பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தெற்கு மண்டலத்தில் உள்ள மொத்தம் 64 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம் : Indian Railway Catering and Tourism Corporation (IRCTC)
வகை : மத்திய அரசு வேலை
காலியிடங்கள் : 64
பணியிடம் : தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா
பதவி: Hospitality Monitors (விருந்தோம்பல் கண்காணிப்பாளர்)
காலியிடங்கள்: 64
சம்பளம்: மாதம் Rs.30,000/-தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.30,000 சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர செலவினங்கள் வழங்கப்படும்.
இந்த பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள், உணவு தயாரிப்பு, உணவு பொருட்கள் பராமரிப்பு ஆகியவற்றின் தரம், சேவை ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும். நிறுவன கொள்கைகளுக்கு உட்பட்டு, தரத்தை மேம்படுத்த வேண்டும். மேலும், வாடிக்கையாளர் சேவை, அலுவலக பணி, கேட்டிரிங் சேவை ஆகியவற்றை சார்ந்து அமையும். ஒரு மாதத்திற்கு 22 நாட்கள் ரயிலில் பணி செய்யும் வகையில் அமையும்.
கல்வி தகுதி:
1. Full time B.Sc. in Hospitality and Hotel Administration.
2. Bachelor of Business Administration (BBA)/ Master of Business Administration (MBA)
3. B.Sc. Hotel Management and Catering Science.
4. M.B.A (Tourism and Hotel Management) from Government recognized Universities affiliated to UGC/AICTE /Government of India/ State Government. (CIHM/SIHM/ PIHM), affiliated National Council for Hotel Management and Catering Technology (NCHM & CT)/ UGC /AICTE /Govt of India. Candidates passed out before 2024 are only to apply.
வயது வரம்பு: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 01.10.2025 தேதியின்படி, அதிகபடியான வயது வரம்பு 28 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு விதிமுறைகளின் அடிப்படையில் எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், ஒபிசி மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு தளர்வு வழங்கப்படுகிறது.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
நேர்காணல் நடைபெறும் இடம் நாள் நேரம்:
1.IHMCT, Trivandrum (Kerala).
G.V.Raja Road, Kovalam,
Trivandrum - 695527
நேர்காணல் நடையப்பெறும் தேதி : 08/11/25
2.Institute of Hotel Management Bengaluru (Karnataka)
Seshadri Rd, near M S Building,
Ambedkar Veedhi,
Bengaluru,
Karnataka 560001.
நேர்காணல் நடையப்பெறும் தேதி :12/11/25
3.IHMCT & AN, Chennai (Tamil Nadu)
CIT Campus,
Taramani,
Chennai 600113
நேர்காணல் நடையப்பெறும் தேதி :15/11/25
4.State Institute of Hotel Management and Catering Technology, Thuvakudi
Thanjavur Rd,
Thuvakudi,
Tamil Nadu 620015
நேர்காணல் நடையப்பெறும் தேதி :18/11/25
நேர்காணலுக்கு செல்பவர்கள் https://www.irctc.com/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, அதனுடன் தேவையான ஆவணங்களின் நகல் மற்றும அசல் இரண்டையும் எடுத்து செய்ய வேண்டும். விண்ணப்பதார்களின் 3 புகைப்படங்களை அதனுடன் சமர்பிக்க வேண்டும்
