பாலிவுட்டில் நடிகை தீபிகா படுகோன் மற்றும் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘பதான்’ படத்திலிருந்து ‘பேஷாரம் ரங்’ என்ற பாடல் இரண்டு நாட்களுக்கு முன் வெளியானது.
இதுவரை 36 மில்லியன் பார்வையாளர்களை இந்த பாடல் கடந்துள்ளது. இந்நிலையில் இப்பாடலில் காவி நிறத்தில் தீபிகா அணிந்துள்ள அரைகுறை ஆடை குறித்தும், அந்த பாடல் வரிகள் குறித்தும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
‘வெட்கமற்ற நிறம்’ என்று பொருள் படும்படியான ‘பேஷாரம் ரங்’ என்ற இந்தப் பாடலில் தீபிகா படுகோன் காவி நிற பிகினி உடையணிந்து ஷாருக்கானுடன் கொச்சையான அசைவுகளுடன் நடனமாடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாஜக-வின் நிறமான காவி உடை அணிந்து ‘வெட்கமற்ற என்று பாடுவது பாஜக-விடையே பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது.
இதுகுறித்து மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர் நரோத்தம் மிஷ்ரா கூறியதாவது; தீபிகா படுகோன் தன் ஆடையின் நிறத்தை மாற்றாவிட்டால் மத்திய பிரதேச மாநிலத்தில் ‘பதான்’ படத்தை திரையிட விடமாட்டோம் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இப்பாடலில் நடித்த ஷாருக்கானுக்கும் எதிர்ப்புகள் ஏற்பட்டுள்ளன.