வாக்களிப்பது கட்டாயமா..? உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன.?

vote
vote
Updated on

தேர்தல்களில் வாக்காளர்கள் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. ஆனால் கட்டாய வாக்களிப்பு என்பது அரசின் கொள்கை சார்ந்தது எனக்கூறி, இநத வழக்கை ஏற்க மறுத்தது உச்ச நீதிமன்றம்.

இந்தியாவில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும். வேண்டுமென்றே தேர்தலில் வாக்களிப்பதை தவிர்க்கும் வாக்காளர்களுக்கு அரசின் பொதுநலத் திட்டங்களில் பயன்பெறுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

இதற்கான வழிகாட்டுதலை தேர்தல் ஆணையம் வெளியிடும் படி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனற பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள்:
#BREAKING: பரபரக்கும் அரசியல் களம்: சீமானை எச்சரித்த செல்வப்பெருந்தகை - என்ன நடந்தது?
vote

கட்டாய வாக்களிப்பு மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம் அதற்கான காரணத்தையும் தெளிவுபடுத்தியுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், “கட்டாய வாக்களிப்பு என்பது அரசின் கொள்கை சார்ந்த விஷயம். இதில் நீதிமன்றத்தால் தலையிட முடியாது” எனக் கூறி மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்.

எப்போதுமே இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான தேர்தல்களில் 60% முதல் 80% வரையில் தான் வாக்குகள் தான் பதிவாகும். வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை தேர்தல் ஆணையம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் நடந்து முடிந்த புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக 90%-கும் மேல் வாக்குகள் பதிவானது. இன்னும் 6 நாட்களில் தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால், 100% வாக்குப் பதிவு சாத்தியமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இதையும் படியுங்கள்:
#BREAKING: தொகுதி மறுவரையறை: தென் மாநிலங்களுக்குப் பாதிப்பு ஏற்படாது - மத்திய அரசு உறுதி!
vote
logo
Kalki Online
kalkionline.com