இஸ்ரேலுக்கு லெபனான் பகிரங்க எச்சரிக்கை.! லெபனான் மீது இஸ்ரேல் முழு அளவிலான போரைத் தொடங்கினால்...

Lebanon vs Israel
Lebanon President
Published on

மத்திய கிழக்கில் போர் நீடித்து வரும் சூழலில், ‘அமைதியை சீர்குலைப்பவர்களின் கை வெட்டப்படும்’ என இஸ்ரேலுக்கு லெபனான் விடுத்துள்ள எச்சரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ​

இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள், லெபனான் எல்லைப் பகுதிகளில் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, லெபனானின் இறையாண்மையை மீறி நிலத்தடித் தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டால், “கை வெட்டப்படும்” என லெபனான் அதிபர் ஜோசப் கடுமையாக எச்சரித்துள்ளார்.

​காசா போரின் தொடக்கத்தில் இருந்தே இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லையில் அவ்வப்போது ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. எல்லையில் வசிக்கும் தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க, ஹிஸ்புல்லா அமைப்பை எல்லையிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதே இஸ்ரேலின் எண்ணம்.

ஒருவேளை லெபனான் மீது இஸ்ரேல் முழு அளவிலான போரைத் தொடங்கினால், அது இஸ்ரேலுக்குத் தான் பேரிழப்பை ஏற்படுத்தும் என்றும், அவர்களின் ஆக்கிரமிப்பு முயற்சி முறியடிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார் அதிபர் ஜோசப். இந்த வார்த்தைப் போர் ஒருவேளை நேரடிப் போராக மாறினால், அது ஈராக், சிரியா மற்றும் ஈரான் போன்ற நாடுகளையும் உள்ளிழுக்கும் அபாயம் உள்ளதாக கருதப்படுகிறது.

ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் லெபனானுக்கு இந்தப் போர் பேரழிவை ஏற்படுத்தும். ஆகையால் போரில் ஈடுபடாமல் இருப்பதே லெபனானுக்கு நல்லது என உலகத் தலைவர்கள் கூறுகின்றனர். மேலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்த மோதலைக் குறைக்கத் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் லெபனானின் அமைதியை சீர்குலைப்பவர்களின் கை வெட்டப்படும் என அந்நாட்டு அதிபர் ஜோசப் எச்சரிக்கை விடுத்திருப்பது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் நடவடிக்கையால் தெற்கு லெபனானின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

லெபனானின் இந்த எச்சரிக்கை என்பது வெறும் வார்த்தை மட்டுமின்றி, இஸ்ரேலின் எந்தவொரு தரைவழித் தாக்குதலுக்கும் தயார் நிலையில் இருப்பதாக ஹிஸ்புல்லா அமைப்பு காட்டும் ஒரு அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்: பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்ய இனி 55 நிமிடங்கள் போதும்.!
Lebanon vs Israel

மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்று வரும் போர் இன்னும் முடிவடையாத சூழலில், தற்போது இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையேயான வார்த்தை மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் திறக்காவிடில், ஈரானை முழுமையாக தாக்கி அழிப்போம் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த சில நாட்களாக போரை நிறுத்த ஈரானுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக டிரம்ப் கூறிய நிலையில், தற்போது ஈரானை முழுமையாக அழிப்போம் என தெரிவித்து இருப்பது போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
#BIG NEWS : இனி Facebook, Instagram பயன்படுத்த ID கார்டு வேணுமா? இதோ முழு விவரம்!
Lebanon vs Israel

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com