.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
தமிழகத்தில் வீடு, அலுவலகம், கடைகளை வாடகைக்கு விடும் போது அதற்கான ஒப்பந்தம் மேற்கொள்வது கட்டாயமாகும். ஆனால், பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள் இதை கடைப்பிடிக்காமல் அலட்சியமாக இருந்து விடுகின்றனர். பின்னர் பிரச்சனைகள் ஏற்படும் போது தான் புலம்ப ஆரம்பிக்கின்றனர். இதனை கருந்தில் கொண்டு தமிழக அரசு 2017ல் வாடகை வீட்டுவசதி சட்டத்தை நிறைவேற்றியது. வீட்டு உரிமையாளருக்கும், வாடகைத்தாரருக்கும் இடையேயான உரிமைகள் மற்றும் கடமைகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டதே இந்த சட்டம். பதிவு செய்த வீடுகளின் உரிமையாளர், வாடகைதாரர் இடையே பிரச்னை ஏற்பட்டால், அது குறித்து வாடகை வீட்டுவசதி நீதிமன்றம் விசாரிக்கும்.
வீட்டு உரிமையாளருக்கும், வாடகைத்தாரருக்கும் இடையேயான அந்த ஒப்பந்தத்தில் வாடகை தொகை, ஒப்பந்த காலம், பராமரிப்பு செலவுகள் போன்ற விவரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். மேலும் ஆண்டுதோறும் வீட்டு வாடகை அதிகபட்சமாக 5% வரை மட்டுமே உயர்த்தலாம் என்று சட்டம் குறிப்பிடுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் வீட்டின் உரிமையாளர், வாடகைத்தாரருடன் வீட்டு வாடகை பிரச்சனை, வாடகை பாக்கி, பாரமரிப்பு செலவு, வாடகை உயர்வு, ஒப்பந்த காலம் போன்ற பிரச்சனைகள் எழும் போது சட்டரீதியாக எதிர்கொள்ள முடியும்.
அதேபோல் வீட்டு உரிமையாளர் சட்டபூர்வமான காரணமில்லாமல் வாடகைத்தாரரை வெளியேற்றப்பட முடியாது. வாடகைத்தாரர் ஒப்பந்தப்படி நியமிக்கப்பட்ட தேதி வரை வாடகை செலுத்த வேண்டும்; தாமதம் ஏற்பட்டால், சட்டம் சிறிய அபராதம் விதிக்கவும் சட்டத்தில் இடமுண்டு.
வீட்டு வாடகை பிரச்சனைகளை குறைக்கவும், வீடு உரிமையாளருக்கும், வாடகைத்தாரருக்கும் இடையேயான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே இச்சட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். இந்த சட்டத்தின் மூலம் இரு தரப்பினருக்கும் சட்ட ரீதியான பாதுகாப்பும், ஒழுங்கான வாடகை சூழலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாடகை உயர்வு, விலக்கு, மிரட்டல் போன்ற பிரச்சனைகளுக்கும் வாடகை வீட்டுவசதி நீதிமன்றம் மூலம் தீர்வு வழங்கப்படுகிறது.
இச்சட்டத்தின் மூலம் அத்தனை நன்மைகளும் கிடைக்க வேண்டுமானால், வீட்டை வாடகைக்கு விடுபவர், அது குறித்து வாடகை வீட்டு வசதி ஆணையத்தில் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் சம்பந்தப்பட்ட வீடுகளின் உரிமையாளர், வாடகைதாரர் இடையே பிரச்சனை ஏதாவது ஏற்பட்டால், அது குறித்து வாடகை வீட்டுவசதி நீதிமன்றம் விசாரிக்க முடியும்.
இந்த சட்ட விதிகளுக்கு உட்பட்டு, முறையாக பதிவு செய்யாத வீடுகளில் பிரச்னை ஏற்பட்டால், அது குறித்த வழக்குகளை, இதற்கான நீதிமன்றங்கள் ஏற்பதில்லை. வாடகை வீட்டுவசதி சட்டத்தில் காணப்படும் இந்த நிபந்தனையால், ஒப்பந்தம் இன்றி வீட்டை வாடகைக்கு விட்டவர்கள், குடியிருப்பவரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சட்ட விதிகளுக்கு உட்பட்டு, முறையாக ஓப்பந்தங்களை பதிவு செய்யாத வீடுகளில் வீட்டு உரிமையாளரக்கும், வாடகைத்தாரருக்கும் பிரச்னை ஏற்பட்டால், அது குறித்த வழக்குகளை, இதற்கான நீதிமன்றங்கள் ஏற்பதில்லை. ஆனால் அதேசமயம், ஒப்பந்தம் இல்லாமல் வீட்டை வாடகைக்கு விடுபவர்கள், பல சமயங்களில் வீட்டில் குடியிருக்கும் வாடகைத்தாரரை வெளியேற்ற முடியாமல் அவதிபடும் சூழ்நிலைகளும் ஏற்படுகிறது.
எனவே, வீட்டினை வாடகைக்கு விடும் போது அந்த வீட்டின் வாடகை ஒப்பந்தத்தை சட்டபூர்வமாக பதிவு செய்ய வேண்டும். அப்படி ஒப்பந்தத்தை பதிவு செய்யாத போது, வாடகைத்தாரர் வாடகை பாக்கி, வீட்டை காலி செய்யாமல் மிரட்டல் விடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் போது, தனது பக்கம் நியாயம் இருந்தாலும் வீட்டின் உரிமையாளர் தனக்கான உரிமைகளை நீதிமன்றத்தில் சட்டரீதியாக பெற முடியாது. இது போன்று வீட்டின் உரிமையாளர் மற்றும் வாடகைத்தாரரின் நடவடிக்கைகள் சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்கு தடையாகிவிடும்..
எனவே வீட்டின் உரிமையாளர் மற்றும் வாடகைத்தாரர் இடையே எந்த பிரச்சனையும், சண்டை சச்சரவுகள் ஏற்படாமல் இருக்கவும், இருவருக்கும் இடையே சமூகமான உறவு ஏற்படவும் எப்போதுமே வீடுகளை வாடகைக்கு விடும்போது சட்டப்படி வாடகை ஒப்பந்தம் செய்து அதை ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும். பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தத்தால் மட்டுமே வீட்டின் உரிமையாளருக்கு சட்டப்படி பாதுகாப்பு கிடைக்கும். முன்பே பதிவு செய்யாத வீடுகளில் ஏதாவது பிரச்சனை வந்தால், சட்ட ரீதியாக அவற்றுக்கு தீர்வு கிடைக்காது. அதனால் முன்கூட்டியே வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்வது முக்கியம் என்று அறிவுறுத்துகிறார்கள் நிபுணர்கள்.
பதிவு செய்வது எப்படி?
வாடகைதாரரும், உரிமையாளரும் சேர்ந்து ஒப்பந்தம் எழுத வேண்டும். இதனை சாா் பதிவாளர் அலுவலகத்தில் அல்லது இணைய வழியில் பதிவு செய்ய வேண்டும். இதற்கு ஆதார், பான் அட்டை என ஏதேனும் ஒரு ஆவணம் போதுமானது. வாடகைதாரர்களுக்கு குறைவான முன்பணம், திடீர் வாடகை உயர்வு, சட்டப் பாதுகாப்பு போன்ற பலன்கள் இதன்மூலம் வலியுறுத்தப்படும். வீட்டு உரிமையாளர்களுக்கு வரி நன்மைகள், வாடகை வசூல் எளிது, வலுவான ஆவணம் உருவாக்கம், தகராறுகளுக்கு தீர்ப்பு, மோசடி ஆகியை தடுக்கப்படும்.