

ITC, Godfrey Phillips போன்ற இந்தியாவின் பெரிய சிகரெட் கம்பெனிகள் இன்று முதல் (மே 1) சிகரெட் விலையை ஏற்ற முடிவு செய்துள்ளனர். மே மாதத்தில் சிகரெட் விலைகள் 17% உயர்த்தப்பட்டதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, ஐடிசி மற்றும் காட்ஃப்ரே பிலிப்ஸ் நிறுவனங்களின் பங்குகள் 7% வரை உயர்ந்தன. நேற்றைய மாலை நிலவரப்படி ITC பங்குகள் ₹316.30-க்கும், Godfrey Phillips பங்குகள் ₹2,281.20-க்கும் நல்ல ஏற்றத்தை கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் சந்தேஷமடைந்துள்ளனர்.
இதுக்கு முக்கிய காரணம் அரசாங்கம் போட்ட வரிதான். அதாவது சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான கூடுதல் கலால் வரி சட்டத்திருத்தம் பிப்ரவரி 1-ம்தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அரசானை வெளிட்டது. அதன்படி புகையிலைப் பொருட்களுக்கான அடிப்படை ஜிஎஸ்டி 28%-லிருந்து வியக்கத்தக்க வகையில் 40%-ஆக உயர்த்தப்பட்டது.
மத்திய கலால் வரிச் சட்டம் திருத்தப்பட்டு, சிகரெட் பாக்கெட்க்கு மட்டும் வரி விதிக்கப்படுவதற்குப் பதிலாக, ஒரு சிகரெட்டுக்கு வரி விதிக்கப்படும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. மேலும், வரி விகிதங்கள் குறிப்பாக சிகரெட்டின் நீளத்தைப் பொறுத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
பிப்ரவரி 2026-ல் விதிக்கப்பட்ட புதிய கலால் வரி உயர்வால், இந்தியாவில் சிகரெட் விலை பாக்கெட்டுக்கு சுமார் ₹50 வரை அதிகரித்துள்ளது. பிரபலமான 84 மி.மீ சிகரெட் பாக்கெட் விலை ₹170-லிருந்து ₹220-225 ஆக உயர்ந்துள்ளது. வரியை 40% உயர்த்தியதால், பிரீமியம் சிகரெட்டுகள் மற்றும் 76 மி.மீ அளவுள்ள சிகரெட்டுகளின் விலையும் கணிசமாக அதிகரித்தது. இதனால், சிகரெட் கம்பெனிகளோட தயாரிப்பு செலவு 22% முதல் 28% வரைக்கும் அதிகரித்தது. இதனால் நிறுவனங்கள் இந்தச் செலவுகளை விலையை உயர்த்துவதன் மூலம் நுகர்வோர் மீது சுமத்த முடிகிறது.
இந்நிலையில் ITC, Godfrey Phillips போன்ற இந்தியாவின் பெரிய சிகரெட் கம்பெனிகள் இன்று முதல் (மே 1) சிகரெட் விலையை ஏற்ற முடிவு செய்துள்ளனர். மத்திய பட்ஜெட்டில் கடுமையான வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்திய பின்னர், சிகரெட் நிறுவனங்கள் தங்கள் லாப வரம்புகளைப் பாதுகாக்க எடுத்த ஒரு மூலோபாய நடவடிக்கையே இந்த மே மாத விலை உயர்வு ஆகும்.
இந்த விலை உயர்வு உயர் ரக பிராண்டுகளுக்கு மட்டுமல்லாமல், மலிவு விலைப் பிரிவுக்கும் பொருந்தக்கூடும் என்று நம்பப்படுகிறது.
அறிக்கைகளின்படி, ஐடிசியின் கோல்டுஃப்ளேக் பிரீமியம் சிகரெட்டுகளின் விலை ஒரு பாக்கிற்கு ரூ.115-லிருந்து சுமார் ரூ.135 ஆக உயரக்கூடும்.
இந்த விலை உயர்வு ஆரம்பத்தில் விற்பனையை சிறிதளவு பாதிக்கலாம் என்றாலும் விலையை உயர்த்துவதன் மூலம் சிகரெட் நிறுவனங்கள் தங்கள் லாபத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
வரி மற்றும் செலவு அழுத்தங்கள் தொடர்ந்தால் எதிர்காலத்தில் சிகரெட் விலைகள் மேலும் அதிகரிக்க கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது, இன்று முதல் நுகர்வோர் சிகரெட்டுகளுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியுள்ள நிலையில் இனிவரும் நாட்களில் இந்த விலை உயர்வு மேலும் அதிகரிக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
விலை உயர்வும் வரிகளின் சுமையும் சேரும்போது அது சாதாரண நுகர்வோரை நேரடியாகப் பாதிக்கும். அதேநேரம் சிகரெட் நிறுவனங்கள் தங்கள் லாபத்தைப் பாதுகாக்க எடுக்கும் இந்த முயற்சி, நுகர்வோரின் செலவினங்களை அதிகரிக்க செய்யும் என்பது நிச்சயம்.