தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் கேவிஎன் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி மற்றும் நரேன் என பலர் நடித்துள்ள படம் 'ஜனநாயகன்'. உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நேற்று (ஜூலை 23) வெளியானது. விஜய்யின் திரைப்பயணத்தில் இதுவே அவரது கடைசித் திரைப்படம் என்பதால், ரசிகர்கள், தவெகவினர் மற்றும் திரையுலகினர் ஜனநாயகன் படத்தை கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.
திரையரங்குகள் முன்பு பட்டாசுகள் வெடித்தும், தோரணங்கள் கட்டியும் ஆட்டம்பாட்டம் என உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.இப்படத்தைக் கொண்டாடும் விதமாக ரசிகர்கள் மற்றும் தவெக கட்சியைச் சேர்ந்தவர்கள் திரையரங்கம் முழுக்க ஜனநாயகன் திரைப்பட பதாகையுடன் சேர்த்து, முதலமைச்சர் விஜய் நடிகராக இருந்தபோது நடித்த முன்னணி படங்கள் சிலவற்றின் பதாகைகளையும் வைத்திருந்தனர்.மேலும், அந்த பதாகைகளுக்கு மாலை அணிவித்தும், பாலாபிஷேகம் செய்தும் அவர்கள் கொண்டாடினர். தொடர்ந்து, 69 கிலோ கேக்கை வெட்டிய ரசிகர்கள், சுமார் ஆயிரம் பேருக்கு விஜய் உருவம் பொறித்த 'ஜனநாயகன் டி சர்ட்' மற்றும் தவெக கட்சியின் சின்னமான 'விசில்' ஆகியவற்றை வழங்கி மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழ்நாடு மற்றும் கேரளா மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா என உலகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் இத்திரைப்படத்தை உற்சாகமாக வரவேற்றனர்.
தமிழ்நாடு மற்றும் கேரளா மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா என உலகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் இத்திரைப்படத்தை உற்சாகமாக வரவேற்றனர்.
திரையரங்குகள் முன்பு பிரம்மாண்ட தோரணங்கள், பாலாபிஷேகம், பட்டாசு வெடிப்புகளுடன் கொண்டாட்டங்கள் களைகட்டின.
விஜய்யின் பழைய ஹிட் படங்களின் பதாகைகளுக்கும் ரசிகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
69 கிலோ எடையில் பிரம்மாண்ட கேக் வெட்டப்பட்டதோடு, ஆயிரம் பேருக்கு விஜய் உருவம் பொறித்த 'ஜனநாயகன்' டி-ஷர்ட் மற்றும் தவெக கட்சியின் 'விசில்' ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன.
ஜனநாயகன் முதல் நாள் வசூல் நிலவரம்:
இந்தியாவில் மட்டும் 13,000-க்கும் மேற்பட்ட காட்சிகளுடன், ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியானது.
இந்திய வசூல்: முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ. 48.27 கோடி (Gross) வசூலாகியுள்ளது.
வெளிநாட்டு வசூல்: சர்வதேச அளவில் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
மொத்த வசூல்: உலகளவில் முதல் நாளிலேயே ரூ. 78.27 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஆன்லைன் அல்லாத நேரடி டிக்கெட் விற்பனையையும் சேர்த்தால் இந்தத் தொகை இன்னும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
எம்ஜிஆர், விஜய் இருவருக்கும் உள்ள ஒற்றுமை :
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் கடைசிப் படமான 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' (1978) திரைப்படம் வெளியான பிறகு முழு நேர அரசியலில் ஈடுபட்ட அரசியல்வாதியாக மாறிய எம்.ஜி.ஆர் தனது வாழ்நாளில் இறுதி நாள் வரை முதலமைச்சராக பதவி வகித்தார். அதேபோல், தற்போது முதலமைச்சர் விஜய்யின் கடைசி படமாக 'ஜனநாயகன்' அமைந்துள்ளது.
இருப்பினும், இதில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க வித்தியாசம் உள்ளது. எம்.ஜி.ஆர் முதலமைச்சரான பிறகு வெளியான படங்களில் 'மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்' என்று மட்டுமே டைட்டில் கார்டு போடப்பட்டது. ஆனால் இன்றைய முதலமைச்சர் விஜய்யின் ’ஜனநாயகன்’ திரைப்படத்தில் ’மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்’ என டைட்டில் கார்டு போடப்பட்டுள்ளது. இது விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது முதலமைச்சர் என்ற டைட்டில் கார்டு இடம்பெறாததற்கு தொழில்நுட்பமே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
விஜய்யின் திரைவாழ்வின் ஆரம்ப காலகட்டங்களில் 'விஜய்' என்று மட்டுமே டைட்டில் கார்டு போடப்பட்டது.
'விஜய்' ---> 'இளைய தளபதி' ----> 'தளபதி' என உருவெடுத்த அவரது திரைப்பயணம், இன்று 'முதலமைச்சர் விஜய்' என்ற உச்சத்துடன் நிறைவடைவது தொண்டர்களையும் ரசிகர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.