

திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கிற்கான ஊடகம் மட்டுமல்ல; அவை சமூகத்தின் மனநிலையையும், மக்களின் எண்ணங்களையும் பிரதிபலிக்கும் சக்திவாய்ந்த கலை வடிவமாகும். அந்த வகையில், ‘ஜனநாயகன்’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
K.V.N production ஜனவரி 9 ம் தேதி ரிலீஸ் ஆகக்கூடிய ஜனநாயகன் படம் எங்களால் தவிர்க்க முடியாத காரணத்தினால் மாற்றி வைக்கிறோம் என்று நேற்று post வெளியிட்டிருந்தார்கள்.இது எங்கள் control ல் இல்லாத காரணத்தினால் படத்தை ரிலீஸ் பண்ண certificate வேண்டும். ஆனால் அது கிடைக்க கோர்ட்டுக்கு சென்றால் அதை நாளை விசாரிப்பதாக கோர்ட் சொல்வதால் தள்ளி போய் கொண்டிருக்கிறது. அந்த நிலைமையில் தான் படம் ரிலீஸ் பண்ணுவதை மாற்றி வைப்பதாக சொல்லி இருந்தார்கள். அவர்கள் மக்களுக்கு கூறுவது படம் ரிலீஸ் ஆகும் வரை அனைவரும் அமைதியாக இருக்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். உங்கள் ஆதரவு தான் எங்களுடைய ஜனநாயகன் டீமை கொண்டு செல்கிறது என்று ஜனநாயகன் டீம் உருக்கமாகத் தெரிவித்தது.
ஆனால் இன்று காலையில் முக்கியமான இரண்டு விஷயங்கள் நடந்திருக்கிறது.
1.அரசியல் தரப்பில்: தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் லீடர்ஸ் ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக இருக்கிறார்கள். காங்கிரஸும், திமுக வும் கூட்டணியாக இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.
காங்கிரஸில் இருக்கும் MP, MLA கள் உட்பட காங்கிரஸின் முக்கிய தலைவரால் ஒருவராகிய கிரிஸ் சண்டோகர் என்பவர் (தமிழ்நாடு+பாண்டிச்சேரி), பா.ஜ.கா தான் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகாமல் இருப்பதற்கு காரணம் என்று. அரசியல் ஆதாயத்துக்காக சினிமாவில் ஒரு கலைஞனின் வேலையை தடுத்து நிறுத்துவதை ஏற்க முடியாது. தமிழ்நாட்டு மக்கள் சினிமாவில் கை வைப்பதை பொறுக்க மாட்டார்கள்.
அரசியல் ஆதாயத்திற்காக ஒரு கலைஞனின் வேலையைத் தடுப்பதை ஏற்க முடியாது. மோதுவதாக இருந்தால் அரசியல்வாதி விஜய்யுடன் மோதுங்கள்; நடிகர் விஜய்யுடன் மோத வேண்டாம்" என்று பதிவிட்டுள்ளார். திமுக கூட்டணியில் இருந்துகொண்டு காங்கிரஸ் இப்படத்திற்கு ஆதரவு அளிப்பது அரசியல் வட்டாரத்தில் பெரிய விவாதமாக மாறியது.
2.சினிமா தரப்பில்:
சினிமா தரப்பில், நடிகர் ரவி மோகன், "நாங்கள் அனைவரும் உங்களோடு இருக்கிறோம்; நீங்கள் வரும் நாள்தான் எங்களுக்குப் பொங்கல்" எனப் பதிவிட்டுள்ளார்.அதேபோல் நடிகர் சிம்பு, பல புயல்களை கடந்து விட்டீர்கள். இதுவும் கடந்து போகும். உண்மையான திருவிழா ஜனநாயகன் ரிலீஸ் ஆகும் நாள்தான் என ஆதரவு தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 18-ம் தேதியே தணிக்கைக்கு விண்ணப்பித்தும், குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு ஒரு தனிநபர் அளித்த புகாரால் சான்றிதழ் நிறுத்தி வைக்கப்பட்டது. சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படத்தின் வழக்கில், இன்று உயர் நீதிமன்ற நீதிபதி பி.டி. ஆஷா அதிரடித் தீர்ப்பு வழங்கினார். அதன்படி, ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு உடனடியாக ‘யு/ஏ’ (U/A) சான்றிதழ் வழங்கத் தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு உடனடியாக 'யு/ஏ' (U/A) சான்றிதழ் வழங்க வேண்டும் என்று இன்று காலை சென்னை உயர் நீதிமன்றத் தனி நீதிபதி பி.டி. ஆஷா உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு விஜய் ரசிகர்களுக்குப் பெரும் உற்சாகத்தை அளித்த நிலையில், தணிக்கை வாரியம் (Censor Board) இதனை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்தது.இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மேலும், தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரும் இந்த வழக்கின் விசாரணையை வரும் ஜனவரி 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதனால், ஜனவரி 21 வரை 'ஜனநாயகன்' திரைப்படம் வெளியாக வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
விசாரணையின் போது, "தணிக்கைச் சான்றிதழ் வாங்காமலேயே பட வெளியீட்டுத் தேதியை பட நிறுவனம் எப்படி அறிவிக்கலாம்?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். "சென்சார் சான்றிதழ் பெறாமல் படத்தின் வெளியீட்டுத் தேதியை நீங்களாகவே அறிவித்துவிட்டு, பின்னர் நீதிமன்றத்திற்கு வந்து 10 அல்லது 12 மணி நேரத்தில் உத்தரவு வழங்க வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பீர்களா? என்ன அர்த்தம் இதற்கு? சான்றிதழ் பெறச் சில காலம் காத்திருக்க முடியாதா?" என்று நீதிபதிகள் தயாரிப்பு நிறுவனத்தைக் கேள்விகளால் துளைத்தெடுத்தனர்.
தொடர்ந்து பேசிய நீதிபதிகள், "வழக்குகளுக்கு என்று ஒரு நடைமுறை உள்ளது. இந்த வழக்கை இரண்டு நாட்களில் முடிக்க வேண்டிய அளவுக்கு என்ன அவசரம் இருக்கிறது? இதில் எந்த அவசரமும் இருப்பதாகத் தெரியவில்லை" என்று தயாரிப்பு நிறுவனத்திடம் கறாராகக் கூறினர். அதே சமயம், தணிக்கை வாரியத்தையும் நோக்கிய நீதிபதிகள், "இந்த வழக்கை இன்றே மேல்முறையீடு செய்ய உங்களுக்கு மட்டும் என்ன அவசரம் வந்தது?" என்றும் கேள்வி எழுப்பினர்.
தணிக்கை வாரியத்தின் மேல்முறையீட்டு மனு குறித்துப் பதிலளிக்கப் படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தனி நீதிபதி வழங்கிய உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்தனர். மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜனவரி 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
ஜனவரி 21 வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளதால், திட்டமிட்டபடி பொங்கல் பண்டிகைக்கு 'ஜனநாயகன்' வெளியாகாது என்பது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.