ஒரே நாளில் இரட்டை வெற்றி: அரசியலில் அப்பா... சினிமாவில் மகன்.!

குடும்பத்துடன் படம் பார்த்த ஜேசன் சஞ்சய்; இலவச பேருந்து திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் விஜய்.
சிக்மா - ஜேசன் சஞ்சய்
CM Vijay
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

தமிழக முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ திரைப்படம் இன்று (அக்டோபர் 2) திரையரங்குகளில் வெளியானது. சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கிற்கு இயக்கநர் ஜேசன் சஞ்சய் தனது அம்மா சங்கீதா மற்றும் சகோதரி திவ்யா சாஷா ஆகியோரும் வந்திருந்து, படத்தின் முதல் நாள் முதல் காட்சியை (FDFS) கண்டு ரசித்தனர்.

தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளில் மகளிர் இலவச பயணம் மேற்கொள்ளும் ‘வெற்றி பயணத் திட்டத்தை’ முதல்வர் விஜய் இன்று காலையில் தொடங்கி வைத்தார். ஒருபுறம் சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட்டு இன்று தமிழக முதல்வராக உயர்ந்திருக்கும் விஜய், பெண்களுக்கான சிறப்பு வாய்ந்த திட்டத்தை விரிவாக்கம் செய்தார். அதேசமயம் மறுபுறம் முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

இன்று சஞ்சய் இயக்கத்தில் வெளியான சிக்மா திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களுடன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதையும் படியுங்கள்:
இந்தியாவுக்கு 11வது தங்கம்.! வில்வித்தையில் 10 முறை ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்திய இந்திய மகளிர் அணி!
சிக்மா - ஜேசன் சஞ்சய்

ஒரே நாளில் இருவேறு சிறப்பு வாய்ந்த சம்பவங்கள் நடந்திருப்பது, முதல்வர் விஜய்க்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் முதல்வர் விஜய், அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணத்தை தொடங்கி வைத்ததன் மூலம் தமிழ்நாட்டுப் பெண்களின் நல் ஆதரவையும், ஆசியையும் பெற்றுள்ளார்.

மேலும் தனது மகன் இயக்கத்தில் வெளியான சிக்மா திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதும், ஒரு தந்தையாக முதல்வர் விஜய்க்கு மகிழ்ச்சியான செய்தியாகும்.

வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில் முதல்வரின் மகன் ஜேசன் சஞ்சய் படம் பார்க்க வந்தபோது, ரசிகர்கள் பலரும் ஆரவாரம் செய்தனர்.

அப்போது “படம் சூப்பர்… நீங்களும் உங்க அப்பா மாதிரியே அழகா க்யூட்டா இருக்கீங்க..” என சில ரசிகர்கள் ஆரவாரத்துடன் கைகாட்டினார். பால்கனியில் இருந்த ஜேசன் சஞ்சய் ரசிகர்களைப் பார்த்து கையசைத்து விட்டு சிரித்துக் கொண்டே சென்றார்.

தியைட்டரில் ஜேசன் சஞ்சய்யை பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் செய்த சிசிடிவி காட்சி, தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் படியுங்கள்:
முதல்வர் விஜய்க்கு பேருந்தில் திருஷ்டி சுற்றிய பெண்: அடுத்து முதல்வர் செய்த நெகிழ்ச்சி செயல்.!
சிக்மா - ஜேசன் சஞ்சய்

ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா திரைப்படம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே வெளியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்போது முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் வெளியானதால், சிக்மா படத்தின் வெளியீடு தள்ளிப் போனது.

இந்நிலையில் தொடர் விடுமுறையை ஒட்டி அக்டோபர் 2-ம் தேதி சிக்மா திரைப்படம் இன்று வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com