இந்திய ரிசர்வ் வங்கியில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Officer Grade A & B பணிகளுக்கு (பல்வேறு பிரிவுகளில்) மொத்தம் 28 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சட்ட அதிகாரி, தொழில்நுட்ப பிரிவில் மேனேஜர், ராஜசபை மற்றும் பாதுகாப்பு பிரிவில் உதவி மேனேஜர் ஆகிய பதவிகள் நிரப்பப்படுகிறது.
ஆகையால் சட்டம் மற்றும் பொறியியல் துறைகளில் பட்டம் பெற்றவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது. இந்தப் பணியிடங்கள் மத்திய அரசுப் பணிகள் வகையைச் சேர்ந்தவை என்பதால், இந்தியா முழுவதும் உள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள்:
கிரேடு 'B' யில் சட்ட அதிகாரி – 05
கிரேடு 'B' யில் மேலாளர் (டெக்னிகல் - சிவில்) – 06
கிரேடு 'B' யில் மேலாளர் (டெக்னிகல் எலக்ட்ரிக்கல்) - 04
கிரேடு 'A' வில் உதவி மேலாளர் (ஆட்சிமொழிப் பிரிவு) - 03
கிரேடு 'A' வில் உதவி மேலாளர் (பாதுகாப்பு மற்றும் மரபொழுங்குப் பிரிவு) – 10
மொத்தம் – 28 இடங்கள்
கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு:
சட்ட அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.2025 தேதியின்படி, விண்ணப்பதார்கள் 21 வயது முதல் 32 வயது வரை இருக்கலாம். இதில் முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு 3 வருடங்களும், முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு 5 வருடமும் தளர்வு உள்ளது. இவர்கள் இளங்கலை சட்டப்படிப்பை 50 சதவீதத்துடன் முடித்திருக்க வேண்டும். எஸ்டி,எஸ்சி பிரிவினர் 45% மதிப்பெண்கள் முடித்திருக்க வேண்டும். பார் கவுன்சில் பதிவு செய்து 2 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேனேஜர் பதவிக்கு 21 முதல் 35 வயது வரை இருக்கலாம். சிவில் பொறியியல் மற்றும் எலெக்ட்ரிக்கல் பொறியியல் பட்டப்படிப்பு 60% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் அனுபவம் தேவை.
அடுத்து உதவி மேனேஜர் பதவிக்கு குறைந்தபட்சம் 21 முதல் 30 வயது வரை இருக்கலாம். உதவி மேனேஜர் பதவிக்கு முன்னாள் ராணுவ அதிகாரிகள் விண்ணப்பிக்கலாம். 10 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ராஜசபை உதவி மேனேஜர் பதவிக்கு இந்தி பாடத்துடன் முதுகலை பட்டப்படிப்பு முடித்ததுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி இரண்டும் மொழியும் நன்கு தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு முறை:
இந்த பணிகளில் விண்ணப்பிக்கும் நபர்கள் இரண்டு தாள்கள் தேர்வு எழுத வேண்டும். இரண்டு தாள்களும் தலா 100 மதிபெண்களுக்கு என மொத்தம் 200 மதிபெண்களுக்கு தேர்வு எழுத வேண்டும். நேர்காணல் 35 மதிப்பெண்களுக்கு என மொத்தம் 235 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.
விண்ணப்பம் தொடங்கும் நாள்: ஜூலை 11, 2025
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 31, 2025
விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ. 600 ஆகவும், SC, ST மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 100 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு குறித்த முழு விவரங்களை, ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (opportunities.rbi.org.in) வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் விரிவாகப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.