

தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்து நின்று 108 தொகுதிகளில் வெற்றியை ஈட்டியது. இருப்பினும் ஆட்சி அமைக்க மேலும் 11 எம்எல்ஏக்கள் தேவை என்ற சூழலில், ஆதரவு கேட்டு திமுக கூட்டணி கட்சிகளுக்கு விஜய் அழைப்பு விடுத்தார். இந்நிலையில் முதல் கட்சியாக திமுகவுடனான உறவை முறித்து கொண்டு தவெக-விற்கு காங்கிரஸ் தனது ஆதரவை அளித்தது. இதனால் தவெக-வின் பலம் 112 ஆக உயர்ந்த நிலையில் ஆட்சி அமைக்க கூடுதலாக 6 இடங்கள் தேவை என்ற சூழலில், கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்தியன் முஸ்லிம் லீக் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி ஆகிய கட்சிகளிடம் விஜய் ஆதரவு கேட்டிருந்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியன் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி ஆகிய மூன்று கட்சிகளுடன் கடந்த இரு தினங்களாக தவெக பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் நேற்று 3 கட்சிகளும் விஜய்க்கு ஆதரவளிப்பதாக தனது முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.
இதற்கிடையே இந்தியன் முஸ்லிம் லீக் கட்சியும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு இல்லை என அதிரடியாக அறிவித்தது. இதனை தொடர்ந்து தவெகவின் பலம் 116 ஆக சரிந்தது. விசிக கட்சியும் இன்று தனது முடிவை அறிவிப்பதாக கூறியுள்ளது
இப்படியான சூழலில் கடந்த சில மாதங்களாகவே திமுக ஆதரவாளரும், பிக்பாஸ் பிரபலம் ஜூலி தொடர்ந்து தவெகவை விமர்சித்து தன்னுடைய கருத்துகளை சமூகவலைத்தளங்களில் வீடியோவாக பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் ஜூலி வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் படுவைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியன் கம்யூனிஸ்ட் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ளனர். இந்த ஆதரவு கூட்டணியை விட்டு தரவில்லை. கூட்டணியில் இருந்து கொண்டு தான் தருகிறார்கள். இந்த ஆதரவு ஏன் தருகிறோம் என்றால், குடியரசு தலைவர் ஆட்சிக்கு போய்விட்டால் பாஜக ஆட்சி வந்துவிடும் என்ற ஒரே காரணத்தினால் தான்..
அதனால நல்லா யோசிச்சு பாத்துக்கோங்க எங்களுடைய தயவால் தான் நீங்களும் இப்போது ஆட்சி அமைத்திருக்கிறீர்கள். அப்புறம் ஆறு மாதத்திற்குள் எங்களுக்கு பிடிக்காத சட்டங்களை நிறைவேற்றுவது, மொழி திணிப்பு, மக்களுக்கு எதுவும் அநியாயம் செய்கின்ற மாதிரி விஷயங்களில் நீங்கள் ஏதேனும் கையெழுத்திட்டால் அப்போ நாங்கள் எங்களுடைய ஆதரவை திருப்பி வாங்கிக்கொள்வோம். அது மட்டும் இல்லாமல் ஆட்சியை கவிழ்த்து விடுவோம். ஜூலியின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைராகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் ஜூலி தனது ட்விட்டர் பக்கத்தில், "தீய சக்தியின் துணையோடு தூய சக்தியின் ஆட்சியமைக்கும் விஜய்" என பதிவிட்டு கலாய்த்துள்ளார்.
இந்த பதிவிற்கு கீழே பலரும் நீங்களே திமுகவை தீய சக்தி என சொன்னால் எப்படி என ஜூலி பக்கமே அந்த பதிவை திருப்பி கிண்டல் செய்து வருகின்றனர்.