

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வரும் நிலையில், நேற்றும் சவரனுக்கு ரூ.800 குறைந்தது. தங்கத்தின் இந்த விலை வீழ்ச்சி இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், 1 லட்சத்துக்கு கீழே சரியுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே மண்டும் போர் மூண்டுள்ள காரணத்தால், பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் தங்கத்தின் விலையில் பெரும் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
நேற்று (ஜூலை 13) தங்கத்தின் விலை ரூ.800 சரிந்த நிலையில், வெள்ளி விலை மாற்றமில்லாமல் விற்பனையானது. இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,05,600-க்கும், ஒரு கிராம் ரூ.13,100-க்கும் விற்பனையானது. 1 கிராம் வெள்ளி ரூ.240-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.2,40,000-க்கும் விற்பனையானது.
நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூலை 14) தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.400 குறைந்து, ரூ.1,05,200-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.50 குறைந்து ரூ.13,150-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.235-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,35,000-க்கு விற்பனையாகிறது
2025-ம் ஆண்டு இதே ஜூலை 14-ல் 1 சவரன் தங்கம் ரூ.73,240-க்கும், 1 கிராம் ரூ.9,155-க்கும் விற்பனையானது. இன்றைய விலையோடு இதனை ஒப்பிட்டால், ஓரே ஆண்டில் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 50% உயர்ந்துள்ளது.
2025 ஜூலை 14-ல் 1 கிராம் வெள்ளி ரூ.127-க்கு விற்பனையானது. இன்றைய விலையோடு ஒப்பிட்டால், ஓரே ஆண்டில் வெள்ளியின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. இந்த அபரிமிதமான விலை உயர்வால் தான் தங்கம் மற்றும் வெள்ளி முதலீட்டை பொருளாதார நிபுணர்கள் தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு கிட்டத்தட்ட 50% லாபமும், வெள்ளியில் முதலீடு செய்தவர்களுக்கு இருமடங்கு லாபமும் கிடைத்துள்ளது.
கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விற்பனை விலை நிலவரம்:
ஜூலை 13: 1 கிராம் - ரூ.13,200 1 சவரன் ரூ.1,05,600
ஜூலை 12: 1 கிராம் - ரூ.13,300 1 சவரன் ரூ.1,06,400
ஜூலை 11: 1 கிராம் - ரூ.13,300 1 சவரன் ரூ.1,06,400
ஜூலை 10: 1 கிராம் - ரூ.13,350 1 சவரன் ரூ.1,06,800
ஜூலை 09: 1 கிராம் - ரூ.13,320 1 சவரன் ரூ.1,06,560
கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விற்பனை விலை நிலவரம்:
ஜூலை 13: 1 கிராம் - ரூ.240
ஜூலை 12: 1 கிராம் - ரூ.240
ஜூலை 11: 1 கிராம் - ரூ.240
ஜூலை 10: 1 கிராம் - ரூ.245
ஜூலை 09: 1 கிராம் - ரூ.245
தங்கத்தின் விலை உயர்வு ஒருபுறம் இருந்தாலும், இப்போதும் தங்கத்தின் மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தங்கத்தின் விலை இப்போது சரிந்தாலும், வருங்காலத்தில் உயரும் என்றே கூறப்படுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.