மீண்டும் சரிந்தது தங்கம் விலை: இதான் ‘கோல்டன் சான்ஸ்’.. மிஸ் பண்ணிடாதீங்க..!!

Gold Price Updates
Gold Price AI Image
Updated on

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த 1 மாதத்திற்கும் மேலாக ஏறுவதும், இறங்குவதுமாகவே உள்ளது. கடந்த வாரத் தொடக்கத்தில் சரிந்த தங்கம், வார இறுதியில் எகிறியது. அதேபோல் இந்த வாரமும் தொடக்கத்தில் சரிந்து, தற்போது மெல்ல உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை மாற்றம் இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், 1 லட்சத்துக்கும் கீழே குறையுமா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. அடுத்த ஒரு மாதத்திற்குள் தங்கத்தின் விலையில் பெரும் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

நேற்று (ஜூலை 14) தங்கத்தின் விலை ரூ.240 உயர்ந்த நிலையில், வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்தது. இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,05,440-க்கும், ஒரு கிராம் ரூ.13,180-க்கும் விற்பனையானது. 1 கிராம் வெள்ளி ரூ.240-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.2,40,000-க்கும் விற்பனையானது

இதையும் படியுங்கள்:
"லஞ்சம் கேட்கிறார்களா?" - புகார் அளிக்க தமிழக அரசின் வாட்ஸ்அப் எண் இதோ.!
Gold Price Updates

நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூலை 16) தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.240 குறைந்து, ரூ.1,05,200-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 குறைந்து ரூ.13,150-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.240-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,40,000-க்கு விற்பனையாகிறது.

2025-ம் ஆண்டு இதே ஜூலை 16-ல் 1 சவரன் தங்கம் ரூ.72,800-க்கும், 1 கிராம் ரூ.9,100-க்கும் விற்பனையானது. 2025 ஜூலை 16-ல் 1 கிராம் வெள்ளி ரூ.124-க்கு விற்பனையானது.

இன்றைய விலையோடு ஒப்பிட்டால், ஒரே ஆண்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்துள்ளது. இந்த அபரிமிதமான விலை உயர்வால் தான் தங்கம் மற்றும் வெள்ளி முதலீட்டை பொருளாதார நிபுணர்கள் தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றனர்

Gold & Silver Price
Gold & Silver

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விற்பனை விலை நிலவரம்:

ஜூலை 15: 1 கிராம் - ரூ.13,180 1 சவரன் ரூ.1,05,440

ஜூலை 14: 1 கிராம் - ரூ.13,150 1 சவரன் ரூ.1,05,200

ஜூலை 13: 1 கிராம் - ரூ.13,200 1 சவரன் ரூ.1,05,600

ஜூலை 12: 1 கிராம் - ரூ.13,300 1 சவரன் ரூ.1,06,400

ஜூலை 11: 1 கிராம் - ரூ.13,300 1 சவரன் ரூ.1,06,400

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விற்பனை விலை நிலவரம்:

ஜூலை 15: 1 கிராம் - ரூ.240

ஜூலை 14: 1 கிராம் - ரூ.235

ஜூலை 13: 1 கிராம் - ரூ.240

ஜூலை 12: 1 கிராம் - ரூ.240

ஜூலை 11: 1 கிராம் - ரூ.240

தங்கத்தின் விலை உயர்வு ஒருபுறம் இருந்தாலும், இப்போதும் தங்கத்தின் மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நிச்சயமாக தங்கத்தின் விலை உயரும் என்ற கணிப்பே இதற்கு முக்கிய காரணம்.

இதையும் படியுங்கள்:
பெற்றோர்களே உஷார்.! குடிக்கிற பால்ல டிடெர்ஜெண்டா? வெளிவந்த பகீர் உண்மை!
Gold Price Updates
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com