

தங்கத்தின் விலையில் கடந்த சில மாதங்களாக சிறிய அளவிலான விலையேற்றம் மற்றும் வீழ்ச்சியே தொடர்கிறது. இருப்பினும் உலகளவில் பாதுகாப்பான முதலீடுகளில் முன்னணியில் இருக்கிறது தங்கம்.
அமெரிக்க டாலரின் வீழ்ச்சி மற்றும் பணவீக்கத்தால் தங்கத்தின் விலை தற்போது சரிந்து வருகிறது. இருப்பினும் இந்த சரிவு நீண்ட காலத்திற்கு நீடிக்காது என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
விரைவில் தங்கத்தின் விலை மீண்டும் உச்சத்தை எட்டும் என்றே கூறப்படுகிறது. குறிப்பாக சீனாவில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதால், உலக சந்தையில் தங்கத்திற்கான தேவை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது.
நேற்று (ஜூலை 28) தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.1,240 குறைந்து, ரூ.1,05,720-க்கு விற்பனையானது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.235-க்கு விற்பனையானது
நகைப் பிரியர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (ஜூலை 29) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.480 குறைந்து, ரூ.1,05,240-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.60 குறைந்து ரூ.13,155-க்கு விற்பனையாகிறது. இதன்படி கடந்த 2 நாட்களில் ரூ.1,720 சரிந்துள்ளது.
வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,35,000-க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை ஓரளவு குறைந்தாலும், ரூ.1 லட்சத்துக்கு கீழே வருமா என்பது தான் சாமானியர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், முதலீடுகள் குறைந்தால் பிரகாசமான வாய்ப்பு இருக்கும். ஆனால் அது சற்று கடினம் தான்.
ஏனெனில் உலக சந்தையில் தற்போது தங்கத்திற்கு மவுசு கூடியுள்ளது. இனி வரும் நாட்களில் விலை மேலும் உயரும் என்றே கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் தங்கத்தில் முதலீடு செய்வதே நல்ல யுக்தியாக பார்க்கப்படுகிறது.
கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை:
ஜூலை 28: 1 கிராம் - ரூ.13,215 1 சவரன் ரூ.1,05,720
ஜூலை 27: 1 கிராம் - ரூ.13,370 1 சவரன் ரூ.1,06,960
ஜூலை 26: 1 கிராம் - ரூ.13,300 1 சவரன் ரூ.1,06,400
ஜூலை 25: 1 கிராம் - ரூ.13,300 1 சவரன் ரூ.1,06,400
ஜூலை 24: 1 கிராம் - ரூ.13,230 1 சவரன் ரூ.1,05,840
கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விலை:
ஜூலை 28: 1 கிராம் - ரூ.235
ஜூலை 27: 1 கிராம் - ரூ.240
ஜூலை 26: 1 கிராம் - ரூ.240
ஜூலை 25: 1 கிராம் - ரூ.240
ஜூலை 24: 1 கிராம் - ரூ.240
தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை சந்திக்கும் அதே வேளையில், வெள்ளி விலையிலும் பெரிதாக மாற்றமில்லை. கடந்த வாரத்தில் பெரும்பாலான நாட்கள் வெள்ளி விலை மாற்றமின்றியே விற்பனையானது.
ஒருவேளை கிராமுக்கு ரூ.5 சரிந்தாலும், அடுத்த நாளே உயர்ந்து விடுகிறது. தங்கத்தில் முதலீடு செய்ய அதிக பணம் தேவைப்படும் என்பதால், சிறிய அளவில் முதலீடு செய்பவர்கள் வெள்ளி முதலீட்டில் கவனம் செலுத்தலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.