

தங்கத்தின் விலை கடந்த வார இறுதியில் திடீர் உயர்வை சந்தித்த நிலையில் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் இந்த தொடர் விலை உயர்வு முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுத்துள்ளது. கடந்த 10 நாட்களாக விலை சரிந்த நிலையில், தற்போது தங்கத்தின் விலை ஏறுமுகத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தங்கத்தில் முதலீடு செய்வது, வருங்காலத்தில் நல்ல பலனைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
நேற்று (ஜூலை 05) ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனையானது.
இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,09,600-க்கும், ஒரு கிராம் ரூ.13,700-க்கும் விற்பனையானது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.2,60,000-க்கு விற்பனையானது.
நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூலை 06) தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,120 குறைந்து, ரூ.1,08,480-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.140 குறைந்து ரூ.13,560-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.10 குறைந்து, ரூ.250-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 குறைந்து ரூ.2,50,000-க்கு விற்பனையாகிறது
கடந்த ஆண்டு இதே நாள் ஜூலை 6-ல் 1 சவரன் தங்கம் ரூ.72,480-க்கும், 1 கிராம் ரூ.9,060-க்கும் விற்பனையானது. இன்றைய விலையோடு இதனை ஒப்பிட்டால், ஓராண்டில் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட பாதியளவு உயர்ந்துள்ளது.
2025 ஜூலை 6-ல் 1 கிராம் வெள்ளி ரூ.120-க்கு விற்பனையானது. இன்றைய விலையோடு ஒப்பிட்டால், ஓராண்டில் வெள்ளியின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது. இதனால் தான் தங்கம் மற்றும் வெள்ளி முதலீட்டை பொருளாதார நிபுணர்கள் ஊக்குவித்து வருகின்றனர்
கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விற்பனை விலை நிலவரம்:
ஜூலை 05: 1 கிராம் - ரூ.13,700 1 சவரன் ரூ.1,09,600
ஜூலை 04: 1 கிராம் - ரூ.13,700 1 சவரன் ரூ.1,09,600
ஜூலை 03: 1 கிராம் - ரூ.13,700 1 சவரன் ரூ.1,09,600
ஜூலை 02: 1 கிராம் - ரூ.13,550 1 சவரன் ரூ.1,08,400
ஜூலை 01: 1 கிராம் - ரூ.13,250 1 சவரன் ரூ.1,06,000
கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விற்பனை விலை நிலவரம்:
ஜூலை 05: 1 கிராம் - ரூ.260
ஜூலை 04: 1 கிராம் - ரூ.260
ஜூலை 03: 1 கிராம் - ரூ.260
ஜூலை 02: 1 கிராம் - ரூ.255
ஜூலை 01: 1 கிராம் - ரூ.245
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது உச்சத்தில் இருப்பதால், சாமானிய மக்கள் நகை வாங்குவதைக் குறைத்துள்ளனர். இருப்பினும் தங்கத்தின் மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளைக் காட்டிலும், தங்கத்தில் நல்ல லாபம் கிடைப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.