#JUST IN: காலையிலேயே ஷாக்..! தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு.!

Gold price
Gold Price
Updated on

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில மாதங்ளாக ஏறுவதும், இறங்குவதுமாகவே உள்ளது. குறிப்பாக கடந்த 1 வாரத்தில் மட்டும் தங்கம் விலை ரூ.6,000 வரை குறைந்தது. இருப்பினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால், நடப்பாண்டில் தங்கத்தின் விலை அதிர்ச்சி அளிக்கும் வகையில் உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், டாலர் வீழ்ச்சியால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்திருப்பதே மிக முக்கிய காரணமாகும். தங்கத்தை ஆபரண நகையாக வாங்கும் சாமானிய மக்கள், அதில் முதலீடு செய்ய முயற்சிக்க வேண்டும்.

முதலீட்டுப் பார்வையில் தங்கம் விலையை கவனித்து வந்தால், அதன் விலை உயர்வது நமக்கெல்லாம் மகிழ்ச்சியாகவே இருக்கும். நேற்று (ஜூன் 14) ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனையானது.

இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,10,880-க்கும், ஒரு கிராம் ரூ.13,860-க்கும் விற்பனையானது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.2,70,000-க்கு விற்பனையானது.

நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூன் 15) தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,680 உயர்ந்து, ரூ.1,12,560-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.210 உயர்ந்து ரூ.14,070-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.10 அதிகரித்து, ரூ.280-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 அதிகரித்து ரூ.2,80,000-க்கு விற்பனையாகிறது.

கடந்த ஆண்டு இதே ஜூன் 15-ல் 1 சவரன் தங்கம் ரூ.74,560-க்கு விற்பனையானது. இன்றைய விலையோடு ஒப்பிட்டால், இடையில் இருக்கும் வித்தியாசமானது கடந்த ஆண்டு விறபனையான தங்கத்தில் பாதியளவு விலை உயர்ந்துள்ளது.

அதேபோல் 2025 ஜூன் 15 அன்று 1 கிராம் வெள்ளி ரூ.120-க்கு விற்பனையானது. இன்றைய விலையோடு ஒப்பிட்டால் இடையில் இருக்கும் வித்தியாசமானது கடந்த ஆண்டு விறபனையான வெள்ளியின் விலையை விட அதிகம்.

Gold Price
Gold Price
இதையும் படியுங்கள்:
இனி இவர்களுக்கு பெட்ரோல், டீசல் கிடையாது.! அதிரடி காட்டிய மத்திய அரசு.!
Gold price

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விற்பனை விலை நிலவரம்:

ஜூன் 14: 1 கிராம் - ரூ.13,860 1 சவரன் ரூ.1,10,880

ஜூன் 13: 1 கிராம் - ரூ.13,860 1 சவரன் ரூ.1,10,880

ஜூன் 12: 1 கிராம் - ரூ.13,800 1 சவரன் ரூ.1,10,400

ஜூன் 11: 1 கிராம் - ரூ.13,500 1 சவரன் ரூ.1,08,000

ஜூன் 10: 1 கிராம் - ரூ.13,800 1 சவரன் ரூ.1,10,400

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விற்பனை விலை நிலவரம்:

ஜூன் 14: 1 கிராம் - ரூ.270

ஜூன் 13: 1 கிராம் - ரூ.270

ஜூன் 12: 1 கிராம் - ரூ.265

ஜூன் 11: 1 கிராம் - ரூ.260

ஜூன் 10: 1 கிராம் - ரூ.260

கடந்த வருடம் தங்கம் மற்றும் வெள்ளியை வாங்கியவர்களுக்கு, தற்போது நல்ல லாபம் கிடைத்துள்ளது. கவலைப்பட வேண்டாம்; இப்போது வாங்கினால் கூட, அடுத்த வருடத்தில் தங்கமும், வெள்ளியும் உங்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுக்கும். தங்கம் விலை உயர்ந்து வருகிறதே என கவலைப்படாமல், அதில் முதலீடு செய்தால் வருங்காலத்தில் நல்ல லாபத்தை ஈட்ட முடியும் என்பதே நிதர்சனம்.

இதையும் படியுங்கள்:
இலவச 5G டேட்டாவுக்கு ஆப்பு! டெலிகாம் நிறுவனங்கள் எடுத்த அவசர முடிவு.!
Gold price
logo
Kalki Online
kalkionline.com