

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில நாட்களாக ஏறுவதும், இறங்குவதுமாகவே உள்ளது. ஆனால் இனி விலையேற்றம் அதிகமாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
100 நாட்களுக்கும் மேலாக நடந்து வந்த அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வரவுள்ளது என்ற அறிவிப்பு வெளியான உடனேயே சர்வதேச சந்தையில் நேற்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 100 டாலருக்கும் மேல் உயர்ந்தது.
இனி தங்கம் விலை நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உயரும் என்ற கணிப்பு, நகைப் பிரியர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இனி தங்கத்தை ஆபரண நகையாக வாங்கும் சாமானிய மக்கள், அதில் முதலீடு செய்ய முயற்சிக்க வேண்டும்.
முதலீட்டுப் பார்வையில் தங்கத்தின் விலையை கவனித்து வந்தால், அதன் விலை உயர்வது நமக்கெல்லாம் மகிழ்ச்சியாகவே இருக்கும்.
நேற்று (ஜூன் 15) ஒரு சவரன் தங்கம் ரூ.1,680 உயர்ந்தது. ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 உயர்ந்தது. இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,12,560-க்கும், ஒரு கிராம் ரூ.14,070-க்கும் விற்பனையானது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.2,80,000-க்கு விற்பனையானது.
நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூன் 16) தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.80 குறைந்து, ரூ.1,12,480-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.10 குறைந்து ரூ.14,060-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.275-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,75,000-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை உயர்ந்து வருகிறதே என கவலைப்படாமல், அதில் முதலீடு செய்தால் வருங்காலத்தில் நல்ல லாபத்தை ஈட்ட முடியும் என்பதே நிதர்சனம். அதறகேற்ப பொருளாதார நிபுணர்களும் தங்கம் மற்றும் வெள்ளி முதலீட்டை ஊக்குவித்து வருகின்றனர்.
குறுகிய காலத்தில் அதிக இலாபம் கொடுக்கும் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு நிகராக, தங்கம் மற்றும் வெள்ளி முதலீடும் இலாபம் கொடுக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விற்பனை விலை நிலவரம்:
ஜூன் 15: 1 கிராம் - ரூ.14,070 1 சவரன் ரூ.1,12,560
ஜூன் 14: 1 கிராம் - ரூ.13,860 1 சவரன் ரூ.1,10,880
ஜூன் 13: 1 கிராம் - ரூ.13,860 1 சவரன் ரூ.1,10,880
ஜூன் 12: 1 கிராம் - ரூ.13,800 1 சவரன் ரூ.1,10,400
ஜூன் 11: 1 கிராம் - ரூ.13,500 1 சவரன் ரூ.1,08,000
கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விற்பனை விலை நிலவரம்:
ஜூன் 15: 1 கிராம் - ரூ.280
ஜூன் 14: 1 கிராம் - ரூ.270
ஜூன் 13: 1 கிராம் - ரூ.270
ஜூன் 12: 1 கிராம் - ரூ.265
ஜூன் 11: 1 கிராம் - ரூ.260
கடந்த ஆண்டு இதே ஜூன் 16-ல் 1 சவரன் தங்கம் ரூ.74,440-க்கு விற்பனையானது. இன்றைய விலையோடு ஒப்பிட்டால், இடையில் இருக்கும் வித்தியாசமானது கடந்த ஆண்டு விறபனையான தங்கத்தில் பாதியளவு விலை உயர்ந்துள்ளது.
அதேபோல் 2025 ஜூன் 15 அன்று 1 கிராம் வெள்ளி ரூ.120-க்கு விற்பனையானது. இன்றைய விலையோடு ஒப்பிட்டால் இடையில் இருக்கும் வித்தியாசமானது கடந்த ஆண்டு விறபனையான வெள்ளியின் விலையை விட அதிகம்.