#JUST IN: காலையிலேயே திடீர் ஷாக்.. எகிறியது தங்கம் விலை.!

Gold Price
Gold Price
Updated on

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர் சரிவை சந்திப்பதால், இந்தியாவிலும் சரிவு தொடங்கியுள்ளது. அமெரிக்கா - ஈரானுக்கு இடையேயான போர் முடிவுக்கு வந்ததாலும், தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

பொருளாதார நிபுணர்கள் தங்கத்தின் விலை உயரும் என கணித்திருந்தாலும், அதன் விலை குறைந்து வருவது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் ஒட்டுமொத்தமாக தங்கத்தின் விலை ரூ.3,680 வரை குறைந்த நிலையில் நேற்று ரூ.640 வரை உயர்ந்தது. இருப்பினும் தங்கத்தின் ஏற்ற இறக்கம் காரணமாக ஆபரண நகையாக வாங்கும் சாமானிய மக்கள், அதில் முதலீடு செய்ய முன்வர வேண்டும்.

நேற்று (ஜூன் 26) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்தது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்தது. இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,06,400-க்கும், ஒரு கிராம் ரூ.13,300-க்கும் விற்பனையானது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.2,45,000-க்கு விற்பனையானது.

நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூன் 27) தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.560 உயர்ந்து, ரூ.1,06,960-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.70 உயர்ந்து ரூ.13,370-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,45,000-க்கு விற்பனையாகிறது.

கடந்த ஆண்டு இதே ஜூன் 27-ல் 1 சவரன் தங்கம் ரூ.71,880-க்கு விற்பனையானது. இன்றைய விலையோடு இதனை ஒப்பிட்டால், இடையில் இருக்கும் வித்தியாசமானது கடந்த ஆண்டு விறபனையான தங்கத்தில் கிட்டத்தட்ட பாதியளவு உயர்ந்துள்ளது.

அதேபோல் 2025 ஜூன் 27 அன்று 1 கிராம் வெள்ளி ரூ.119-க்கு விற்பனையானது. இன்றைய விலையோடு ஒப்பிட்டால் இடையில் இருக்கும் வித்தியாசமானது, கடந்த ஆண்டு விறபனையான வெள்ளியின் விலையை விட இருமடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Gold and Silver Rates
Gold and Silver
இதையும் படியுங்கள்:
2 நிமிடங்களில் ரேஷன் கார்டு ஸ்டேட்டஸ்: முழுமையான வழிகாட்டி!
Gold Price

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விற்பனை விலை நிலவரம்:

ஜூன் 25: 1 கிராம் - ரூ.13,300 1 சவரன் ரூ.1,06,400

ஜூன் 25: 1 கிராம் - ரூ.13,140 1 சவரன் ரூ.1,05,120

ஜூன் 24: 1 கிராம் - ரூ.13,350 1 சவரன் ரூ.1,06,800

ஜூன் 23: 1 கிராம் - ரூ.13,560 1 சவரன் ரூ.1,08,480

ஜூன் 22: 1 கிராம் - ரூ.13,600 1 சவரன் ரூ.1,08,800

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விற்பனை விலை நிலவரம்:

ஜூன் 26: 1 கிராம் - ரூ.245

ஜூன் 25: 1 கிராம் - ரூ.230

ஜூன் 24: 1 கிராம் - ரூ.240

ஜூன் 23: 1 கிராம் - ரூ.250

ஜூன் 22: 1 கிராம் - ரூ.255

தங்கத்தின் விலை சரிவை சந்திக்கும் இப்போது முதலீடு செய்தால் வருங்காலத்தில் நல்ல லாபத்தை ஈட்ட முடியும். அதறகேற்ப பொருளாதார நிபுணர்களும் தங்கம் மற்றும் வெள்ளி விலை மேலும் உயரும் எனக் கணித்துள்ளனர்.

குறுகிய கால முதலீடுகளில் அதிக லாபத்தைக் கொடுக்கும் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு நிகராக, தங்கம் மற்றும் வெள்ளி முதலீடும் நல்ல லாபத்தை அள்ளிக் கொடுக்கும்.

இதையும் படியுங்கள்:
நீங்கள் வாங்கும் மருந்து ஒரிஜினலா? இனி QR கோடை ஸ்கேன் செய்தால் போதும்..!!
Gold Price
logo
Kalki Online
kalkionline.com