

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில நாட்களாக ஏறுவதும், இறங்குவதுமாகவே உள்ளது. நேற்று தங்கம் விலை சரிவை சந்தித்த நிலையில், மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார நிபுணர்கள் பலர் தங்கத்தின் விலை உயரும் என கணித்திருந்த நிலையில், அதன் விலை தொடர்ந்து குறைந்து வருவது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. இருப்பினும் தங்கத்தின் இந்த ஏற்ற இறக்கத்தின் காரணமாக ஆபரண நகையாக வாங்கும் சாமானிய மக்கள், முதலீடு செய்தால் நல்ல லாபத்தை ஈட்ட முடியும்.
நேற்று (ஜூன் 29) தங்கத்தின் விலை ரூ.560 குறைந்த விலையில், வெள்ளி விலையில் மாற்றம் ஏதுமில்லை. இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,06,400-க்கும், ஒரு கிராம் ரூ.13,300-க்கும் விற்பனையானது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.2,45,000-க்கு விற்பனையானது.
நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூன் 30) தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2,160 குறைந்து, ரூ.1,04,240-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.270 குறைந்து ரூ.13,030-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.240-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,40,000-க்கு விற்பனையாகிறது.
கடந்த ஆண்டு இதே ஜூன் 30-ல் 1 சவரன் தங்கம் ரூ.71,440-க்கு விற்பனையானது. இன்றைய விலையோடு இதனை ஒப்பிட்டால், இடையில் இருக்கும் வித்தியாசமானது கடந்த ஆண்டு விறபனையான தங்கத்தில் கிட்டத்தட்ட பாதியளவு உயர்ந்துள்ளது.
அதேபோல் 2025 ஜூன் 30 அன்று 1 கிராம் வெள்ளி ரூ.119-க்கு விற்பனையானது. இன்றைய விலையோடு ஒப்பிட்டால் இடையில் இருக்கும் வித்தியாசமானது, கடந்த ஆண்டு விறபனையான வெள்ளியின் விலையை விட இருமடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விற்பனை விலை நிலவரம்:
ஜூன் 29: 1 கிராம் - ரூ.13,300 1 சவரன் ரூ.1,06,400
ஜூன் 28: 1 கிராம் - ரூ.13,370 1 சவரன் ரூ.1,06,960
ஜூன் 27: 1 கிராம் - ரூ.13,370 1 சவரன் ரூ.1,06,960
ஜூன் 26: 1 கிராம் - ரூ.13,220 1 சவரன் ரூ.1,05,760
ஜூன் 25: 1 கிராம் - ரூ.13,140 1 சவரன் ரூ.1,05,120
கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விற்பனை விலை நிலவரம்:
ஜூன் 29: 1 கிராம் - ரூ.245
ஜூன் 28: 1 கிராம் - ரூ.245
ஜூன் 27: 1 கிராம் - ரூ.245
ஜூன் 26: 1 கிராம் - ரூ.245
ஜூன் 25: 1 கிராம் - ரூ.230
தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை சந்திக்கும் இப்போதைய சூழலில், முதலீடு செய்தால் வருங்காலத்தில் நல்ல லாபத்தை ஈட்ட முடியும். அதறகேற்ப பொருளாதார நிபுணர்களும் தங்கம் மற்றும் வெள்ளி விலை மேலும் உயரும் எனக் கணித்துள்ளனர்.
குறுகிய கால முதலீடுகளில் அதிக லாபத்தைக் கொடுக்கும் முதலீட்டாளர்களின் முக்கிய தேர்வான மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு நிகராக, தங்கம் மற்றும் வெள்ளி முதலீடும் நல்ல லாபத்தை அள்ளிக் கொடுக்கும்