
தங்கத்தின் விலை கடந்த ஒருசில ஆண்டுகளில் மட்டும் வரலாறு காணாத உச்சத்தை சந்தித்து வருகிறது. நடப்பாண்டின் தொடக்கத்தில் ரூ.60,000-ஐ கடந்த தங்கம் விலை, ஒருசில மாதங்களிலேயே ரூ.70,000-ஐ கடந்து இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் தற்போது வரலாற்றில் மீண்டும் புதிய உச்சத்தில் தங்கத்தின் விலை இருக்கிறது. இன்று தங்கத்தின் விலை முதன்முறையாக ரூ.80,000-ஐ கடந்து பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு ஷாக் அடிக்கும் விதமாக அதிர்ச்சி அளித்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று மட்டும் ஒரு சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.80,040 ஆக விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.240 உயர்ந்து ரூ.10,005-க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் ரூ.3,000-க்கும் மேல் உயர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.
யாரும் எதிர்பாராத வகையில் தங்கத்தின் விலை உயர்ந்திருப்பது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி அளித்தாலும், தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஜாக்பாட் அடித்த மாதிரி நல்ல செய்தி என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் நகைகளை வாச்குவதைக் காட்டிலும், இனி சாதாரண மக்களும் தங்கத்தில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்பதை உணர்த்தியிருக்கிறது இந்த விலை உயர்வு.
தங்கத்திற்கு ஈடாக வெள்ளி விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. வெள்ளி விலையும் நடப்பாண்டில் தான் ரூ.100-ஐக் கடந்து அதிர்ச்சியளித்தது. இந்நிலையில் இன்று வெள்ளி ஒரு கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ரூ.138-க்கு விற்பனையாகிறது.
கடந்த ஒரு வாரத்தில் 22 கார்ட் தங்கத்தின் விலையேற்ற இறக்கங்களை இப்போது பார்ப்போம்.
செப்டம்பர் 05 2025 - 1 சவரன் - ரூ.78,920
செப்டம்பர் 04 2025 - 1 சவரன் - ரூ.78,360
செப்டம்பர் 03 2025 - 1 சவரன் - ரூ.78,440
செப்டம்பர் 02 2025 - 1 சவரன் - ரூ.77,800
செப்டம்பர் 01 2025 - 1 சவரன் - ரூ.77,640
ஆகஸ்ட் 31 2025 - 1 சவரன் - ரூ.76,960
ஆகஸ்ட் 30 2025 - 1 சவரன் - ரூ.76,960
கடந்த ஒரு வாரத்தில் வெள்ளியின் விலையேற்ற இறக்கங்களை இப்போது பார்ப்போம்.
செப்டம்பர் 05 2025 - 1 கிராம் - ரூ.136
செப்டம்பர் 04 2025 - 1 கிராம் - ரூ.137
செப்டம்பர் 03 2025 - 1 கிராம் - ரூ.137
செப்டம்பர் 02 2025 - 1 கிராம் - ரூ.137
செப்டம்பர் 01 2025 - 1 கிராம் - ரூ.136
ஆகஸ்ட் 31 2025 - 1 கிராம் - ரூ.134
ஆகஸ்ட் 30 2025 - 1 கிராம் - ரூ.134