#JUST IN: போர் நிறுத்த ஒப்பந்தம்.! டிரம்ப் முக்கிய அறிவிப்பு.!

America - Iran War
American President Donald trumph
Updated on

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் இன்னும் முடிவுக்கு வராத சூழ்நிலையில் ன, இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே முதல் கட்டப் பேச்சுவார்த்தை நடந்த போது ஹார்மூஸ் நீரிணை திறக்கப்பட்டது.

ஆனால் லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியதால், விதிமுறைகளை இஸ்ரேல் மீறிவிட்டது எனக் கூறி மீண்டும் ஹார்மூஸ் நீரிணை மூடியது ஈரான்.

இந்நிலையில் ஈரானுடன் ஒப்பந்தம் செய்வதில் எனக்கு எந்த அவசரமும் இல்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
#JUST IN: பரபரப்பான சூழலில் வாக்காளர்களுக்கு கடிதம் எழுதிய விஜய்.!
America - Iran War

போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து டிரம்ப் கூறூகையில், “ஈரான் அரசுடன் மேற்கொள்ளப்படவுள்ள ஒப்பந்தம் சிறப்பு வாய்ந்தது. கடந்த காலங்களில் மேற்கொண்ட ஒப்பந்தங்களைக் காட்டிலும் இது மிகவும் சிறப்பு வாய்ந்தாக இருக்கும். ஈரானுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்வதில் எனக்கு எந்த அவசரமும் இல்லை. விரைவில் ஹார்மூஸ் நீரிணை திறக்கப்படும்” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

போர் முடிவுக்கு வராத காரணத்தால் ரஷ்யாவிடம் கச்ச எண்ணெயை வாங்கிக் கொள்ள மேலும் ஒரு மாதத்திற்கு இந்தியா உட்பட பல நாடுகளுக்கு அனுமதி அளித்தது அமெரிக்கா.

இந்நிலையில் ஈரானுடன் போர் நிறுத்த ஒப்பந்த மேற்கொள்ளப்பட்டு, முடிவுக்கு வந்துவிட்டால் ஹார்மூஸ் நீரிணை திறக்கப்படும். ஆகையால் வெகு விரைவில் உலக நாடுகளுக்கு எரிசக்தி பற்றாக்குறை பிரச்சினை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
#JUST IN: பறக்கும் படை வேட்டை: ரூ.1,200 கோடியை தாண்டிய பறிமுதல் - உச்சகட்ட பரபரப்பில் தமிழ்நாடு!
America - Iran War
logo
Kalki Online
kalkionline.com