#JUST IN: பரபரப்பான சூழலில் வாக்காளர்களுக்கு கடிதம் எழுதிய விஜய்.!

TVK Vijay
TVK Vijay
Updated on

தமிழ்நாட்டில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடையும் நிலையில், தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளம் வாயிலாக வாக்காளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் உங்களின் ஒற்றைத் தேர்வு விசில் சின்னமாக மட்டுமே இருக்க வேண்டும் என விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதிகாரங்களை ஏவி உங்கள் சகோதரன் விஜய்யை யாராலும் மிரட்டி விட முடியாது என்றும் விஜய் பதிவு.

இதையும் படியுங்கள்:
#JUST IN: சட்டமன்ற தேர்தலையொட்டி நாளை சிறப்பு ரயில்: இன்று மதியம் தொடங்குகிறது முன்பதிவு.!
TVK Vijay

விஜய் பதிவிட்ட எக்ஸ் தளப் பதிவில், “என் நெஞ்சில் குடியிருக்கும் என் சொந்தங்களாகிய தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம். ஆசையோடும் அன்போடும் எனக்காக எல்லாவற்றையும் அள்ளி அள்ளித் தந்த உங்களோடு உங்கள் விஜய் மனம்விட்டுப் பேசவே இக்கடிதம்.

எனக்கு எல்லாமும் தந்த என் சொந்தங்களான தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்த நாள்முதல் சொல்லொணா நெருக்கடிகளையும் நிர்பந்தங்களையும் சொல்லவியலா வேதனைகளையும் இதுவரை நமக்கு விளைவித்தே வந்தவர்கள் வேறு யார்?.

நமது அரசியல் எதிரியான மக்கள் விரோத தீயசக்தி திமுகவும் கொள்கை எதிரியான மற்றும் பலருடன் களம் கானும் பிளவுவாத சக்தியான பாஜகவும் என்று நம் மக்களே அறிவர்.

ஏப்ரல் 23ஆம் தேதி அன்று, நீங்கள் அனைவரும் திருவிழாக் கோலம் பூண்டு, விசில் புரட்சிக்குத் தயாராகி, குடும்பம் குடும்பமாக சென்று வாக்களிக்க வேண்டிய, எவ்வித மறுசிந்தனைக்கும் இடம் தராத ஒற்றைத் தேர்வாக “விசில் சின்னம்” மட்டுமே இருக்க வேண்டும் என உங்களை இருகரம் கூப்பி வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

வாகை சூடுவோம்.

வரலாறு படைப்போம்.

வெற்றி நிச்சயம்.” என விஜய் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: வேளச்சேரியில் நடந்து வந்தே வாக்கு சேகரித்த ஸ்டாலின்!
TVK Vijay

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com