#BIG NEWS: போர் பதற்றங்களுக்கு மத்தியில், 100% இறக்குமதி வரி.! டிரம்ப் அதிரடி.!

Tax on world countries
Donald Trump
Published on

ஈரான் உடனான கடுமையான போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், 100% இறக்குமதி வரி குறித்த அறிவிப்பை சற்றுமுன் வெளியிட்டுள்ளார் அதிபர் டிரம்ப். இந்த அதிரடி மாற்றங்கள் குறித்த பிரகடனத்தில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இந்த வரிவிதிப்பு வருகின்ற ஏப்ரல் 6 ஆம் துதி நள்ளிரவு 12:01 முதல் அமலுக்கு வரவுள்ளது.

இதையும் படியுங்கள்:
#JUST IN: தீவிரமடையும் போர்.! இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்.!
Tax on world countries

மருந்து நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை அமெரிக்காவிற்கு மாற்றாவிட்டால், 100% இறக்குமதி வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தவிர உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க உலோகங்களுக்கான வரி விதிப்பிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு இந்த வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அலுமினியம் மற்றும் தாமிரம் ஆகியவற்றின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த 50% வரி நீடிக்கிறது.

இந்த வரி விதிப்பு அறிவிப்பால் மருத்துவ செலவுகள் உயரும் என கருதப்பட்டாலும், அமெரிக்காவின் தொழில்துறை மேலும் வளர்ச்சி அடையும் எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே பிப்ரவரி 2026-ல், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% கூடுதல் வரியை விதித்தார் டிரம்ப். இந்நிலையில் போர் பதற்றத்தால் ஏற்படும் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தற்போது மீண்டும் வரிவிதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
#JUST IN : ரூ.3,750 கோடி எல்ஐசி பணம் எங்கே? - அனில் அம்பானி மீது பாயும் சிபிஐ..!
Tax on world countries

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com