#JUST IN: தீவிரமடையும் போர்.! இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்.!

Iran Attacks Israel
Iran Attacks Israel
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

மேறகாசிய நாடுகளில் நடைபெற்று வரும் கடுமையான போர் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான்.

இதற்கு முன்னதாக ஈரானில் உள்ள தெஹ்ரான் மற்றும் கராஜ் நகரங்களை இணைக்கும் பி1 பாலத்தின் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே தற்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது ஈரான்.

இதையும் படியுங்கள்:
#JUST IN : ரூ.3,750 கோடி எல்ஐசி பணம் எங்கே? - அனில் அம்பானி மீது பாயும் சிபிஐ..!
Iran Attacks Israel

ஈரானில் உள்ள மிகப்பெரிய பாலமான பி1 பாலத்தை அமெரிக்கா தகர்த்ததை அடுத்து, உலகின் மிகப்பெரிய பாலம் தகர்ந்து விட்டது. காலம் கடந்து விடுவதற்கு முன் ஒப்பந்தம் செய்யுங்கள் என ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் இனியும் ஈரான் ஒப்பந்தம் செய்ய இறங்கி வராவிட்டால், அந்நாட்டில் எதுவும் மிச்சம் இருக்காது எனவும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், பொதுமக்களுக்கான உள்கட்டமைப்புகள் மீதான அமெரிக்காவின் இந்தத் தாக்குதல், எங்களை அடிபணிய வைக்காது என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். இந்நிலையில் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது ஈரான்.

போர் முடிவுக்கு வராத சூழலில், இரு தரப்பிலும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்:
#BREAKING: சாத்தான்குளம் வழக்கு : தண்டனை மீண்டும் ஒத்திவைப்பு..!
Iran Attacks Israel
logo
Kalki Online
kalkionline.com