இந்தியாவுக்கு ஜாக்பாட்..!! ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் தடை விலக்கு நீட்டிப்பு.! அமெரிக்கா அறிவிப்பு.!

 US targeting Venezuela
Crude oil Venezuela and Donald Trump
Updated on

மேற்காசிய நாடுகளில் நிலவி வந்த போர் காரணமாக ஹார்மூஸ் நீரிணை மூடப்பட்டதால், கச்சா எண்ணெய் விலை தொடர் உயர்வை சந்தித்து வந்தது. இந்நிலையில் ரஷ்யாவிடமிருந்து ஒரு மாதத்திற்கு கச்ச எண்ணெய் வாங்கிக் கொள்ள இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு அனுமதி அளித்திருந்தது.

அமெரிக்கா. தற்போது ஒன்றரை மாதமாக போர் நடந்து வரும் சூழலில், பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது. இஸ்ரேல் - லெபனான் போர் 10 நாட்களுக்கு நிறுத்தப்பட்ட நிலையில், ஹார்மூஸ் நீரிணை நேற்று திறக்கப்பட்டது.

இருப்பினும் போர் இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத சூழலில், மேலும் ஒரு மாத காலத்திற்கு கச்சா எண்ணெயை ரஷ்யாவிடம் வாங்கிக் கொள்ள அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
#BREAKING: பீகார் பிரபலத்தை களத்தில் இறக்கிய முதல்வர் ஸ்டாலின்.!
 US targeting Venezuela

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வைத் தடுக்கவே அமெரிக்கா தற்போது ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை வாங்கிக் கொள்வதற்கான தடை விலக்கை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார். இந்தத் தடை விலக்கின் மூலம், இந்தியாவில் கச்சா எண்ணெய் பற்றாக்குறைக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
#BREAKING: நம்மை அரசியல் வலிமை அற்றவர்களாக மாற்ற முயற்சி - முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு.!
 US targeting Venezuela
logo
Kalki Online
kalkionline.com