#JUST IN: தேர்தலுக்கு முன்பாக வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்.!

Voters List
SIR
Updated on

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ம் தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். SIR பணிகளை முன்னிட்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அதில் நீக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பல கட்டங்களாக பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் பலரும் தங்கள் பெயர்களை சேர்க்க விண்ணப்பித்திருந்தனர். அதன்படி கணக்கிடும் போது தமிழகத்தில் 5 கோடியே 63 லட்சம் என்ற அளவில் வாக்காளர்கள் இருப்பதாக கடந்த பிப்ரவரி 23-ம் தேதி இறுதி பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: இனி ஆண்டுக்கு 2 முறை மட்டுமே CA இறுதித் தேர்வு.! ICAS அதிரடி அறிவிப்பு.!
Voters List

இருப்பினும் சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்க்க மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்தது. இதன் பெயரில் பொதுமக்கள் பலரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்திருந்தனர். வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, இறுதியான வாக்காளர் பட்டியலை தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தற்போது வெளியாகியிருக்கும் இறுதி வாக்காளர் பட்டியலின் படி தமிழ்நாட்டில் 2.80 கோடி ஆண் வாக்காளர்களும், 2.93 பெண் வாக்காளர்களும், 7,728 திருநங்கை வாக்காளர்களும் உள்ளனர். SIR பணிகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் 6,35,911 வாக்காளர்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
#JUST IN: 1 நொடியில் பணப் பரிமாற்றம்.! Yatri Pay செயலியை அறிமுகப்படுத்தும் தெற்கு ரயில்வே.!
Voters List
logo
Kalki Online
kalkionline.com