#JUST IN: சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா இந்தியா? எக்ஸ் தளத்தில் முதல்வர் கேள்வி?

delimitation
MK Stalin
Published on

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு, மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப தொகுதி மறுவரையறை செய்ய வேண்டியது அவசியமாகிறது. தற்போது இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த பணிகள் முடிவடைந்ததும், தொகுதி மறுவரையறை பணிகளை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்தியாவில் தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கப்படும். இந்நிலையில் தொகுதி மறுவரையறை குறித்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசிடம் 6 முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: ஹார்மூஸ் ஜலசந்தியை கடக்க ரூ.18.5 கோடி! ஈரானின் கிடுக்கிப்பிடி நிபந்தனை!
delimitation
delimitation
delimitation

தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில, “தொகுதி மறுவரையறையை எப்படி நடத்தப் போகிறார்கள் என வெளிப்படையாக அறிவிக்காமல், ஒன்றிய பா.ஜ.க. அரசு இதுவரை இரகசியம் காப்பது ஏன்?

2001-ஆம் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள், அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தொகுதி மறுவரையறையை ஒத்தி வைத்ததைப் போல, பிரதமர் மோடி அவர்களும் செய்ய வேண்டுமெனத் தென் மாநிலங்கள் முன்வைத்த நியாயமான கோரிக்கைக்குப் பிரதமர் அவர்களின் பதில் என்ன?

5 மாநிலத் தேர்தல்களுக்கு இடையே அவசர அவசரமாக நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கு என்ன அவசியம்?

நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரை ஏப்ரல் 29-க்குப் பிறகு கூட்ட வேண்டும்" என்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் நியாயமான கருத்தை உதாசீனப்படுத்துவதில் மறைந்துள்ள மர்மம் என்ன?

அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டிக் கலந்தாலோசிக்காமல் மிக முக்கியமான அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்ளும் முயற்சி சர்வாதிகாரமன்றி வேறென்ன?

எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் கேட்கும் கேள்விகளுக்குத்தான் பதில் சொல்வதில்லை. மக்களின் கேள்விகளுக்கேனும் பதில் கிடைக்குமா?

தென்மாநிலங்களின் உரிமைக்கு உலை வைத்து, வடக்குக்கு வலிமையை வாரி வழங்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் செயல்களைத் தி.மு.க. பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. இது இங்கு வாழும் மக்களின் எதிர்காலம்!

எங்கள் அனுமதியின்றி, எங்களோடு பேசாமல் இதுதொடர்பாக எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் அதற்கு உயிரே போனாலும் உடன்பட மாட்டோம்! தென்னக மக்களின் நியாயமான கேள்விகளுக்கு மாண்புமிகு பிரதமர் அவர்கள் பதிலளித்தே தீர வேண்டும்!” என முதல்வர் பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:
#JUST IN: தேர்தலுக்கு முன்பாக வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்.!
delimitation

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com