

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நடப்பாண்டு தொடக்கத்தில் இருந்தே உச்சத்தை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக நடப்பாண்டில் ரூ.1 லட்சத்தைக் கடந்த தங்கத்தின் விலை, கடந்த சில நாட்களாக ஏறுவதும் இறங்குவதுமாகவே இருக்கிறது.
அடுத்த 1 வருடத்திற்கு இந்திய மக்கள் யாரும் தங்கத்தை வாங்க வேண்டாம் என பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன்பு வேண்டுகோள் விடுத்தார். இதனைத் தொடர்ந்து தங்கத்தின் மீதான இறக்குமதி வரியும் 15 சதவிகிதமாக உயர்ந்தது. இதனையடுத்து வெள்ளி இறக்குமதியிலும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது மத்திய அரசு.
நேற்று (ஜூன் 1) தங்கம் விலை ரூ.1,040 குறைந்த நிலையில், வெள்ளியின் விலையில் மாற்றம் ஏதுமில்லை. இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,16,000-க்கும், ஒரு கிராம் ரூ.14,500-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.290-க்கு விற்பனையானது.
சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்கள், டாலர் சரிவு, பங்குச்சந்தை சரிவு மற்றும் உலகளாவிய போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலையில் தினந்தோறும் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவின் நடவடிக்கைகள் தங்கத்தின் விலையை அதிகம் பாதிக்கிறது.
தங்கத்தின் தொடர் விலையேற்றத்தால், சாமானியர்களுக்கு தங்கம் எட்டாக்கனியாக மாறி விடுமோ என்ற அச்சமும் நிலவுகிறது. ஆனால் அமெரிக்க டாலர் சரிவால் தங்கத்தில் மாற்று முதலீடு செய்தவர்களுக்கு, இந்த விலை உயர்வு லாபத்தைக் கொடுத்துள்ளது.
இந்நிலையில் நகைப் பிரியர்களுக்கு சற்று நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (ஜூன் 2) தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது. இதன்படி ஒரு சவரன் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,16,000-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.14,500-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.290-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,90,000-க்கு விற்பனையாகிறது.
கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விற்பனை விலை நிலவரம்:
ஜூன் 1: 1 கிராம் - ரூ.14,500 1 சவரன் ரூ.1,16,000
மே 31: 1 கிராம் - ரூ.14,630 1 சவரன் ரூ.1,17,040
மே 30: 1 கிராம் - ரூ.14,630 1 சவரன் ரூ.1,17,040
மே 29: 1 கிராம் - ரூ.14,600 1 சவரன் ரூ.1,16,800
மே 28: 1 கிராம் - ரூ.14,500 1 சவரன் ரூ.1,16,000
கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விற்பனை விலை நிலவரம்:
ஜூன் 1: 1 கிராம் - ரூ.290
மே 31: 1 கிராம் - ரூ.290
மே 30: 1 கிராம் - ரூ.290
மே 29: 1 கிராம் - ரூ.290
மே 28: 1 கிராம் - ரூ.285