#JUST IN: ஒரே நாளில் ரூ.5,000 சரிவு.! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.!

Gold Price
Gold Price
Updated on

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நடப்பாண்டின் தொடக்கத்தில் இருந்தே உயர்ந்து வருகிறது. சாமானியர்கள் மற்றும் இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக நடப்பாண்டில் ரூ.1 லட்சத்தைக் கடந்தது தங்கத்தின் விலை. இருப்பினும் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏறுவதும், இறங்குவதுமாகவே இருக்கிறது.

அடுத்த 1 வருடத்திற்கு இந்திய மக்கள் யாரும் தங்கத்தை வாங்க வேண்டாம் என பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன்பு வேண்டுகோள் விடுத்தார். இதனைத் தொடர்ந்து தங்கத்தின் மீதான இறக்குமதி வரியும் 15 சதவிகிதமாக உயர்ந்தது. இதனையடுத்து வெள்ளி இறக்குமதியிலும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது மத்திய அரசு.

நேற்று (ஜூன் 3) தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் மாற்றம் ஏதுமில்லை. இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,16,000-க்கும், ஒரு கிராம் ரூ.14,500-க்கும் விற்பனையானது.

வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.290-க்கு விற்பனையானது.

சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்கள், டாலர் சரிவு, பங்குச்சந்தை சரிவு மற்றும் உலகளாவிய போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலையில் தினந்தோறும் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவின் நடவடிக்கைகள் தங்கத்தின் விலையை அதிகம் பாதிக்கிறது.

தங்கத்தின் தொடர் விலையேற்றத்தால், சாமானியர்களுக்கு தங்கம் எட்டாக்கனியாக மாறி விடுமோ என்ற அச்சமும் நிலவுகிறது. ஆனால் அமெரிக்க டாலர் சரிவால் தங்கத்தில் மாற்று முதலீடு செய்தவர்களுக்கு, இந்த விலை உயர்வு லாபத்தைக் கொடுத்துள்ளது.

இந்நிலையில் நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூன் 4) தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.160 குறைந்து, ரூ.1,15,840-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து ரூ.14,380-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.285-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,85,000-க்கு விற்பனையாகிறது

இதையும் படியுங்கள்:
வாட்ஸ்அப் பயன்படுத்த இனி காசு கட்டணுமா..?பதறாம இதை படிங்க!
Gold Price

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விற்பனை விலை நிலவரம்:

ஜூன் 3: 1 கிராம் - ரூ.14,500 1 சவரன் ரூ.1,16,000

ஜூன் 2: 1 கிராம் - ரூ.14,500 1 சவரன் ரூ.1,16,000

ஜூன் 1: 1 கிராம் - ரூ.14,500 1 சவரன் ரூ.1,16,000

மே 31: 1 கிராம் - ரூ.14,630 1 சவரன் ரூ.1,17,040

மே 30: 1 கிராம் - ரூ.14,630 1 சவரன் ரூ.1,17,040

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விற்பனை விலை நிலவரம்:

ஜூன் 3: 1 கிராம் - ரூ.290

ஜூன் 2: 1 கிராம் - ரூ.290

ஜூன் 1: 1 கிராம் - ரூ.290

மே 31: 1 கிராம் - ரூ.290

மே 30: 1 கிராம் - ரூ.290

இதையும் படியுங்கள்:
தங்கம் முதல் பெட்ரோல் விலை உயர்வு வரை: மத்திய அரசின் அதிரடி முடிவுகளும், பொதுமக்களின் தவிப்பும்.!
Gold Price
logo
Kalki Online
kalkionline.com