

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில மாதங்களாக உச்சத்தை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடப்பாண்டில் ரூ.1 லட்சத்தைக் கடந்த தங்கத்தின் விலை, கடந்த சில நாட்களாக ஏறுவதும் இறங்குவதுமாகவே இருக்கிறது. கடந்த வாரத் தொடக்கத்தில் சரிவை நோக்கிய தங்கத்தின் விலை, அதன்பிறகு ஏறுவதும் இறங்குவதுமாகவே இருந்தது. நேற்று ஒரு சவரன் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,440 குறைந்து, ரூ.1,10,560-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.180 குறைந்து ரூ.13,820-க்கு விற்பனையானது. வெள்ளி ஒரு கிராம் ரூ.265-க்கு விற்பனையானது.
சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்கள், டாலர் சரிவு, பங்குச்சந்தை சரிவு மற்றும் உலகளாவிய போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலையில் தினந்தோறும் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவின் நடவடிக்கைகள் தங்கத்தின் விலையை அதிகம் பாதிக்கிறது.
இந்நிலையில் நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (மே 6) தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,840 உயர்ந்து, ரூ.1,12,400-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.230 உயர்ந்து ரூ.14,050-க்கு விற்பனையாகிறது
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 அதிகரித்து, ரூ.270-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 அதிகரித்து ரூ.2,70,000-க்கு விற்பனையாகிறது.
நேற்று தங்கத்தின் விலையில் கடுமையாக சரிந்த சூழலில், இன்று ரூ.1,840 உயர்ந்திருப்பது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.