#JUST IN: அமெரிக்காவின் நாடகம் அம்பலம்: அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து ஈரான் கடும் விமர்சனம்.!

Iran - America War
Iran - America
Published on

மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்று வரும் கடுமையான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றத்தையும் அமெரிக்கா ஏற்படுத்தவில்லை என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. காசா மற்றும் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை தாக்குதலை அமெரிக்காவால் தடுத்து நிறுத்த முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

கடந்த 40 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் போரில், பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றத்தையும் கொண்டு வர அமெரிக்கா முயற்சி செய்யவில்லை.

மேலும் லெபனான் மீதான வான்வழித் தாக்குதல், போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளை அர்த்தமற்றதாக மாற்றி விட்டது ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: இனி இந்த படிப்பு கிடையாது.! B.Ed படிப்புகளில் அதிரடி மாற்றம்.!
Iran - America War

எங்களிடம் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையைத் தொடங்கிய அமெரிக்கா, மறுபுறம் இஸ்ரேலுக்கு ஆயதங்களை வழங்கி வருவதாக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

எங்கள் கைகள் எந்நேரமும் துப்பாக்கியின் விசை மீதே இருக்கும் என்று ஈரான், அமெரிக்காவிற்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒருவேளை இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தாலோ அல்லது இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்தவில்லை என்றாலோ, ஈரான் போரில் ஈடுபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
#JUST IN: விஜய் யாருக்கு ‘ஸ்கெட்ச்’ போடுகிறார்? சீமான் விமர்சனம்.!
Iran - America War

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com