

கோடை காலம் தொடங்கி உள்ள சூழலில் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள சுகாதாரத் துறை ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளது.
இதன்படி பொதுமக்கள் அனைவரும் அதிகப்படியான தண்ணீரை குடிக்க வேண்டும் எனவும், 12 மணி முதல் 3 மணி வரை தேவையின்றி யாரும் வெளியில் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் இன்று சென்னையில் வெப்பத்தின் தாக்கம் அதிகளவில் இருக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று சென்னையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் கடுமையாக சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதிக ஈரப்பதம் மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக பொதுமக்களுக்கு அசெளகரியம் ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிக வெப்பத்தின் காரணமாக வெப்ப அலைகள் வீசும் என்பதால், உச்சி வெயிலில் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் வெயிலில் அலைய வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.