

திரைத் துறையில் மிகவும் உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வருகிறது. 2025 ஆம் ஆண்டில் வெளியான சிறந்த திரைப்படங்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு விருது வழங்கும் 98வது ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்று வருகிறது.
இந்த விருது விழாவில் சிறந்த படைப்புகளுக்கும், சிறந்த கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இம்முறையும் இந்த திரைப்படங்கள் ஏதேனும் விருதுகளை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது
ஆஸ்கர் விருது பட்டியல்:
* சிறந்த நடிகருக்கான விருதை சின்னர்ஸ் திரைப்படத்திற்காக வென்றார் மைக்கேல் பி.ஜோர்டான்.
* சிறந்த நடிகைக்கான விருதை ஹேம்னெட் திரைப்படத்திற்காக வென்றார் ஜெஸ்ஸி பக்லி.
* சிறந்த இயக்குநர் விருது 'One Battle After Another' திரைப்படத்திற்காக இயக்குநர் பால் தாமஸ் ஆண்டர்சனுக்கு கிடைத்தது.
விருது வேட்டை:
* சிறந்த படம், இயக்குநர், படத்தொகுப்பு, துணை நடிகை, சிறந்த நடிகர் தேர்வு மற்றும் திரைக்கதை என மொத்தம் 6 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது 'One Battle After Another’ திரைப்படம்.
* Best Sound பிரிவில் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது 'F1' திரைப்படம்.
* சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸகர் விருது, நார்வே நாட்டின் ‘சென்டிமெண்டல் வேல்யூ’ திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது.
* சிறந்த அசல் பாடலுக்கான விருது ‘KPop Demon Hunters’ திரைப்படத்தில் இடம்பெற்ற கோல்டன் பாடலுக்கு கிடைத்துள்ளது.
ஆஸ்கர் விருது பட்டியல்:
* Best Adapted Screenplay பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது லியோனார்டோ டி கேப்ரியோவின் 'One Battle After Another' திரைப்படம். இதன் மூலம் தனது முதல் ஆஸ்கர் விருதை கையில் ஏந்தினார் இயக்குநர் பால் தாமஸ் ஆண்டர்சன்.
* சிறந்த ஒரிஜினல் திரைக்கதைக்கான பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது 'Sinners' திரைப்படம்.
* சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருதை வென்றது கொரியன் திரைப்படமான ‘KPop Demon Hunters’.
* சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான விருதை வென்றது ‘The Girl Who Cried Pearls’ திரைப்படம்.
* சிறந்த ஆவணப் படத்திற்கான விருதை வென்றது ‘Mr. Nobody Against Pudin’ திரைப்படம்.
* சிறந்த ஆவணப்பட குறும்படத்திற்கான விருதை வென்றது ‘ஆல் தி எம்டி ரூம்ஸ்’ திரைப்படம்.
* சிறந்த விஷூவல் எஃபெக்ட்ஸ் பிரிவுக்கான விருதை வென்றது ‘அவதார்: ஃபயர் & ஆஷ்’ திரைப்படம்.
* சிறந்த துணை நடிகருக்கான விருதை ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர் திரைப்படத்திற்காக வென்றார் ‘சீன் பென்’.
* சிறந்த துணை நடிகைக்கான விருதை வெப்பன்ஸ் திரைப்படத்திற்காக வென்றார் ‘ஏமி மேடிகன்’.
* சிறந்த ஒப்பனை அலங்காரத்திற்கான ஆஸ்கர் விருது ‘Frankenstein’ படத்திற்காக மைக் ஹில், ஜோர்டான் சாமுவேல் மற்றும் க்ளியோனா ஃபியூரி ஆகியோருக்கு கிடைத்தது. மேலும் இப்படம் ஆடை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு ஆகிய பிரிவுகளிலும் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றதன் மூலம் 3 விருதுகளை வென்றுள்ளது.